OnePlus மொபைல்களுக்கு ரூ.12,000 வரை அதிரடி தள்ளுபடி! வாரி வழங்கும் ஒன்ப்ளஸ்!

OnePlus Smartphone: நடப்பாண்டில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் கோடைகால விற்பனையில் ஒன்ப்ளஸ் 10 ப்ரோ  5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.12,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.    

Written by - RK Spark | Last Updated : May 8, 2023, 08:34 AM IST
  • ஒன்ப்ளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
  • 12 ஜிபி வரை ரேம் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டுள்ளது.
  • ஐசிஐசிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
OnePlus மொபைல்களுக்கு ரூ.12,000 வரை அதிரடி தள்ளுபடி! வாரி வழங்கும் ஒன்ப்ளஸ்! title=

OnePlus Smartphone: ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஒன்ப்ளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை கோடைகால விற்பனையில் சலுகை விலையில் OnePlus.in மற்றும் அமேசானில் நடத்துகிறது.  நடப்பாண்டில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் கோடைகால விற்பனையில் ஒன்ப்ளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.12,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.  ஒன்ப்ளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.66,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12ஜிபி வரை ரேம் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ளது.  ஒன்ப்ளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Amazon.In மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.11,000 குறைந்து ரூ.55,999 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | Amazon Great Summer Sale: வெறும் ரூ.128 செலுத்தி iPhone 14 வாங்குவது எப்படி? ரகசியம் இங்கே 

OnePlus.in இணையதள பக்கத்தில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒன்ப்ளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டு, ஸ்மார்ட்போன் ரூ.54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  கோடக் மஹிந்திரா வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஒன்ப்ளஸ் 10 ப்ரோ 5ஜி  ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.750 தள்ளுபடி செய்யப்படுகிறது, ஆனால் இந்த தள்ளுபடி சலுகையானது மே 8 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஃபிளாக்ஷிப் 5ஜி இயக்கப்பட்ட சாதனத்திற்கு மேம்படுத்த விரும்பும் பயனர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட 4ஜி சாதனங்களில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை OnePlus.in ஸ்டோரில் பெறலாம்.  ஒன்ப்ளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வல்கனிக் பிளாக் மற்றும் எம்பெரால்ட் ஃபாரஸ்ட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ஒன்ப்ளஸ் 10T-க்கு ரூ.5,000க்கான பிளாட் தள்ளுபடி மற்றும் ஒன்ப்ளஸ் 10R-க்கு ரூ.4000க்கான ரூபாய் பிளாட் தள்ளுபடியையும் வழங்குகிறது.  இவற்றை OnePlus.in, OnePlus Store App, OnePlus Experience stores மற்றும் Amazon.in ஆகியவற்றில் வாங்கலாம்.  

ஒன்ப்ளஸ் நார்ட் ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் நார்ட் CE2 லைட் ஆனது Amazon.in, OnePlus.in மற்றும் OnePlus ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரூ.500 தள்ளுபடியில் கிடைக்கிறது.  ஒன்ப்ளஸ் நார்ட் 2T ஆனது OnePlus.in, OnePlus ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரூ.1,500 தள்ளுபடியில் கிடைக்கிறது.  இந்த மொபைல்களுக்கான சலுகைகளை Amazon.in மே 10 வரை மட்டுமே வழங்குகிறது மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.  ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட், ஒன்ப்ளஸ் பேட் சமீபத்தில் இந்தியாவில் ரூ.37,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.  OnePlus விற்பனையின் போது, ​​வாங்குபவர்கள் Kotak Mahindra வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.1,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.  மேலும் ஒன்ப்ளஸ் நிறுவனம் மே 3 முதல் மே 6 வரை ஒன்ப்ளஸ் நார்ட் வாட்ச் மீது ரூ 1,000 மற்றும் மே 7 முதல் மே 10 வரை ரூ 500 தள்ளுபடியை வழங்குகிறது.  மேலும் ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | JioCinema: நமக்கு இலவசம் தான்.. ஆனாலும் ஜியோ சினிமாவிற்கு வருமானம் எப்படி வருகிறது தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News