ஓலா கேப்ஸ் நிறுவனம் வரும் ஓராண்டில் 10,000 e-rickshaws and e-autorickshaws தனது சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி நாக்பூரில் தனது முதல் மின்சாரத் திட்டத்தை ஓலா அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த திட்டத்தில் electric cabs, electric auto rickshaws, electric buses, rooftop solar installations, charging stations, and battery swapping experiments இடம்பெறுகிறது என ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஓலாவின் ‘மிஷன் எலெக்ட்ரிக்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் அடுத்த 12 மாதங்களுக்குள் 10,000 பேட்டரி ஆட்டோக்களை ஓலா நிறுவனத்தில் சேர்க்கப்பட இருக்கின்றன.
பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் விதத்தில் 2021-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேட்டரி வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 40 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக பேட்டரி வாகனங்களை இயக்கியுள்ளோம். இந்த அனுபவத்துடன் இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த உள்ளோம் என்றும் பவிஷ் அகர்வால் தெரிவித்தார்.