ஷாக் கொடுத்த OLA, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்வு

ஓலா எலக்ட்ரிக் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களை வாங்குவதற்கான முன்பதிவு தற்போது ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற்று வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2022, 09:09 AM IST
  • ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள்
  • எஸ் 1 ப்ரோ விலையை திடீரென மாற்றிய ஓலா
  • ஸ்கூட்டர்களை அப்டேட் செய்து வருவதாக தகவல்
ஷாக் கொடுத்த OLA, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்வு title=

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர்களுக்கு நல்ல மற்றும் கெட்ட செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. அதன்படி இதில் நல்ல செய்தி என்னவென்றால், நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை மிண்டும் தொடங்கியது. அதாவது இன்று முதல் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு வலைதளம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். 

மறுபுறம் மோசமான செய்தி என்னவென்றால், இப்போது இந்த ஸ்கூட்டரை வாங்க உங்களுக்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். உண்மையில், நிறுவனம் இந்தியாவில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை அடுத்து ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை உயர்வு பற்றிய தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி

ஓலா எலக்ட்ரிக் இணையதளத்தில் நீங்கள் முன்பதிவு செய்யலாம்
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் olaelectric.com க்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் இப்போது வாங்குவதற்கான விருப்பத்தைக் காண்பீர்கள். இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் முன்பதிவு செய்யலாம். அதன்படி ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சமாகவும், ஓலா எஸ்1 ப்ரோவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.40 லட்சமாகவும் உள்ளது. அதே சமயம் டெல்லியில் இதன் விலை ரூ.85 ஆயிரம் மற்றும் 1.20 லட்சம் ஆக இருக்கிறது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள்

* ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.98 கிலோவாட் பேட்டரி பேக் உடன் வருகிறது, அதே நேரத்தில் ஓலா எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.97 கிலோவாட் பேட்டரி பேக் கொண்டது.

* இந்த எஸ் 1 மாடல் ஓலா ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 121 கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 90 கி.மீ ற்றும் 3.6 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும்.

* அதேபோல, எஸ் 1 ப்ரோ மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 181கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 115 கி.மீ. மற்றும் 3 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தையும், 5- வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தையும் அடைய முடியும்.

* மேலும்,எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகிய 3 வகையான பயண நிலைகள்(ரைடிங் மோட்களும்) உள்ளன.

* மேலும்,ஓலா எஸ் 1 ப்ரோவை 6 மணி 30 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும், அதே நேரத்தில் ஓலா எஸ் 1 மாடலை சார்ஜ் செய்ய 4 மணி 48 நிமிடங்கள் ஆகும்.

* ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்மார்ட் வாகன கட்டுப்பாட்டு அலகு, ஆக்டா-கோர் செயலி, 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜி, வைஃபை மற்றும் ப்ளூடூத் மூலம் அதிவேக இணைப்புடன் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | மணிக்கு 1300 KM மேக்னடிக் ரயில் அதிவேக ஹைப்பர்லூப்பை உருவாக்க திட்டமிடும் எலோன் மஸ்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News