இன்ஸ்டாகிராமை போல இனி பேஸ்புக்கிலும் ரீல்ஸ் செய்யலாம்!

உலகில் அதிகமான மக்கள் பேஸ்புக்கில் பாதி நேரம் வீடியோக்களை பார்ப்பதில் தான் செலவிடுகிறார்கள்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2022, 04:35 PM IST
  • பேஸ்புக் ஷார்ட் வீடியோ அம்சமான ரீல்ஸை 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
  • பேஸ்புக் ரீல்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.
இன்ஸ்டாகிராமை போல இனி பேஸ்புக்கிலும் ரீல்ஸ் செய்யலாம்! title=

சமூக வலைத்தளங்களை பல தரப்பினராலும் பயன்படுத்தப்படுகிறது, அதிலும் குறிப்பபாக மற்ற சமூக தளங்களை விட பேஸ்புக் தான் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது பேஸ்புக் ஷார்ட் வீடியோ அம்சமான ரீல்ஸை 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது.  இதன் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக இந்த அம்சம் அறிமுகப்படுத்த உள்ளது என்று கடந்த செவ்வாயன்று மெட்டா தெரிவித்துள்ளது.

Facebook Reels rolls out worldwide along with new creative tools and ads |  TechCrunch

மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம்

இந்த மிகப்பெரிய சமூக ஊடகமானது அதன் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்தபின், ரீல்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.  மெட்டா நிறுவனமானது ரீல்ஸை 2020-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியது, பின்னர் பேஸ்புக்கில் 2021-ல் அறிமுகப்படுத்தியது.  இவை புகழ்பெற்ற சீன செயலியான டிக்டாக்கிற்கு பதிலடி தரும் வகையில் அமைந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் கூறுகையில், 'ரீல்ஸ் ஏற்கனவே எங்களின் வேகமாக வளர்ந்து வரும் கன்டென்ட் வடிவமாகும், இதனை இன்று உலகளவில் பேஸ்புக்கில் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய போகிறோம்" என்று தெரிவித்தார்.  மேலும் பேஸ்புக்கில் மக்கள் பாதி நேரத்தை வீடியோக்கள் பார்க்கத்தான் செலவிடுகிறார்கள் என்று கூறும் நிறுவனம், தற்போது அறிமுகப்படுத்தும் ரீல்ஸ் அம்சத்தின் மூலம் க்ரியேட்டர்களுக்கு வருவாய் ஈட்டுவதறகான புதிய வழிகளையும் வழங்குகிறது.  

மேலும் நிறுவனம் கூறுகையில், கிரியேட்டர்களுக்காக திட்டத்தை விரிவுபடுத்துவதாகவும், விளம்பர வருவாயை ஈட்டுவதற்கு, கிரியேட்டர்களுக்கு பேனர்கள் மற்றும் ஸ்டிக்கர்களை வழங்கி சோதிக்க போகிறது. ஆப்பிளின் தனியுரிமை மாற்றங்களால், மெட்டா அதிக வருவாயை ஈட்டியுள்ளதாக கூறுகிறது.  மேலும் ஸ்டோரி, வாட்ச் டேப் மற்றும் நியூஸ் ஃபீட் போன்ற இடங்களில் பேஸ்புக் ரீல்களை உருவாக்கவும் பார்க்கவும் பயனர்களுக்கு அப்டேட்டுகளை வெளியிடுவதாக கூறியுள்ளது.

மேலும் படிக்க | உஷார் மக்களே! வங்கிக் கணக்கை காலி செய்யும் மோசமான செயலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News