கிரெடிட் கார்டை ஸ்மார்ட்டா பயன்படுத்துங்க! Gpay, Paytm மூலம் செலவழித்தால் கூடுதல் கட்டணமில்லை

Credit Card: ஜிபே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ ஐடிக்களுடன் உங்கள் கிரெடிட் கார்டை இணைப்பதன் மூலம் கூடுதல் கட்டணம் இல்லாமல் செலவழிக்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 24, 2023, 07:00 AM IST
கிரெடிட் கார்டை ஸ்மார்ட்டா பயன்படுத்துங்க! Gpay, Paytm மூலம் செலவழித்தால் கூடுதல் கட்டணமில்லை title=

Credit Card UPI Payment: UPI நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. காய்கறி கடை முதல் கழிப்பிடம் வரை யுபிஐ மூலம் கட்டணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அத்தகைய சூழலில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லையும் யுபிஐ ஐடி வழியாகவே நீங்கள் செலுத்திவிட முடியும். அதற்கு நீங்கள் உங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐ ஐடியுடன் இணைத்திருக்க வேண்டும். உங்கள் வாலட்டில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எப்படி இணைக்க முடியும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Paytm - கிரெடிட் கார்டு இணைப்பு 

Paytm பயன்பாட்டிற்குச் சென்று உங்கள் புரொபைல் படத்தைக் கிளிக் செய்யவும். பேமெண்ட் செட்டிங்ஸ்களுக்கு சென்று சேமித்த அட்டைகள் விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு Add New Card என்பதைத் கிளிக் செய்யவும். உங்களிடம் அட்டை விவரங்கள் கேட்கப்படும். 'சமீபத்திய RBI guildelines படி கார்டைச் சேமி' என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, OTP ஐ உள்ளிட்டவுடன், உங்கள் கிரெடிட் கார்டு, பேடிஎம் -உடன் இணைக்கப்பட்டு விடும். 

மேலும் படிக்க | Credit Card: கூகுள் பே மூலம் கிரெடிட் கார்ட் பில் ஈஸியாக செலுத்துவது எப்படி?

PhonePe - கிரெடிட் கார்டு இணைப்பு 

PhonePe-க்குச் சென்று உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும். அங்கு View All Payment Methods ஆப்ஷனுக்குச் செல்லவும். கிரெடிட்/டெபிட் கார்டுகளின் கீழ் ADD CARD என்பதைத் கிளிக் செய்யவும். உங்கள் அட்டை விவரங்களை உள்ளிட்டு, ADD விருப்பத்தைத் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டால், போன்பேவுடன் கிரெடிட் கார்டு இணைக்கப்பட்டுவிடும். 

Google Pay - கிரெடிட் கார்டு இணைப்பு 

Google Payயைத் திறந்து உங்கள் சுயவிவரத்திற்குச் செல்லவும். Payment Options மூலம் கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதன்பிறகு உங்கள் கார்டை ஸ்கேன் செய்ய வேண்டும். உங்கள் விவரங்களை மேனுவலாக பதிவிட வேண்டும். காலாவதி தேதி மற்றும் CCV ஐ உள்ளிட்டு சேமிக்கவும். விதிமுறைகளைப் படித்த பிறகு, மேலும் என்பதைக் கிளிக் செய்தபிறகு ஓடிபி உங்களுக்கு வரும். அதை உள்ளிட்ட பிறகு செயல்முறை முடிவடையும்.

இவற்றை இணைப்பதனால் என்ன பயன் என நீங்கள் நினைக்கலாம். யுபிஐ ஐடி மூலம் அனைத்து இடங்களிலும் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பணம் செலுத்த முடியும். அதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், 2000 ரூபாய் மட்டுமே லிமிட்.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்; வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News