அதிக Spam call அழைப்புகள்:இந்தியாவிற்கு நான்காவது இடம்!

Spam அழைப்புகளை அதிகம் பெரும் டாப் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 18, 2021, 01:49 PM IST
அதிக Spam call அழைப்புகள்:இந்தியாவிற்கு நான்காவது இடம்! title=

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள்  முக்கிய பிரச்சனையாக இருப்பது, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.  டெலிமார்க்கெட்டிங், இன்ஷூரன்ஸ், கிரெடிட் கார்டு போன்றவைகளுக்காக அதிகளவு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதாக தெரிய வந்துள்ளது.  சமீபத்தில் ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட Truecaller வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.  கடந்த 2020 அறிக்கையின்படி ஒன்பதாவது இடத்தில இருந்த இந்தியா இந்தாண்டு நான்காவது இடத்தில் உள்ளது.

ALSO READ | இந்தியாவின் விலையுயர்ந்த டீ; அதிகமில்லை ₹99,999 மட்டுமே..!!

டெலிமார்க்கெட்டிங் சம்மந்தப்பட்ட ஸ்பேம் அழைப்புகள் 93.5% வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  ஒரு மாதத்திற்கு சராசரியாக 32.9 ஸ்பேம் அழைப்புகளுடன் பிரேசில் முதலிடத்தில் உள்ளது.  அதேபோல ஒரு மாதத்திற்கு சராசரியாக  18.02 ஸ்பேம் அழைப்புகளுடன் பெருவில் இரண்டாமிடத்தில் உள்ளது.  மூன்றாவது இடத்தில் உக்ரைனும், நான்காவது இடத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

spam

சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் 6,64,000 அழைப்புகளும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 27,000 அழைப்புகளும் வருவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.  அதிலும் குறிப்பாக நாட்டில் நிலவும் அதிகமான மோசடிகளில் ஒன்று KYC மோசடி.  இதன் மூலம் வாங்கி, டிஜிட்டல் கட்டண சேவை குறித்து மோசடி நடக்கிறது.

ALSO READ | ஆஷஸ் டெஸ்டில் விழுந்த இடி, கேமராவில் கைதான மின்னல்: ட்விட்டரில் மீம்ஸ் மழை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News