ஆப்பிள் ஐபோன் தள்ளுபடி: ஐபோன் 14 தொடர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் ஐபோன் 11க்கான தேவை இன்னும் நிற்கவில்லை. ஐபோன் 14 சீரிஸ் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. ஏனெனில் இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஐபோன் 11 பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இப்போது வரை அதன் தேவை அப்படியேதான் உள்ளது.
இது மலிவான விலையில் கிடைக்கவில்லை. எனினும், வாடிக்கையாளர்கள் அதை வாங்கி பயன்படுத்த விரும்புகிறார்கள். இப்போது ஹோலிக்கு முன், ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 11 வாங்குவதற்கு தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண தள்ளுபடி சலுகை அல்ல. இந்த மாபெரும் தள்ளுபடி சலுகை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் மிக அதிக அளவில் சேமிக்க முடியும்.
இதில் உள்ள சலுகை என்ன?
பிளிப்கார்ட்டில் iPhone XI Black 64GB மாறுபாட்டிற்கு தள்ளுபடி சலுகை வழங்கப்படுகின்றது. இதன் அசல் விலை ரூ. 43,900 ஆகும். ஆனால், இதில் 8% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வாடிக்கையாளர் ரூ. 39,999 என்ற லிஸ்டட் விலையில் அதை வாங்கலாம்.
மேலும் படிக்க | இனி வாட்ஸ் அப்பிலேயே மெட்ரோ டிக்கெட் எடுத்து கொள்ளலாம்!
பிளியோகார்ட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இந்த தள்ளுபடி வழங்கப்படுவதால், இந்த தள்ளுபடிக்காக வாடிக்கையாளர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. இந்த ஐபோனில் கிடைக்கும் தள்ளுபடி இவ்வளவுதான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதில் இன்னும் அதிக தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த ஐபோன் மாடலை வாங்கினால் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய அளவில் சேமிக்கலாம்.
எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலன் கிடைக்கும்
பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்ட விலையில் 8% தள்ளுபடியை வழங்குகிறது, அதன் பிறகு அதன் விலை ரூ. 39,999 ஆக குறையும். ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த விலையில் இன்னும் ரூ. 20,000 சேமிக்க முடியும். பிளிப்கார்ட்டில் உங்கள் பழைய போனை நீங்கள் பரிமாற்றிக் கொண்டால் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை நீங்கள் பயன்படுத்தி ரூ. 20,000 சேமிக்கலாம், இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸின் ரூ. 20,000 குறைந்தால், இந்த ஐபோன் மாடலை வெறும் ரூ. 19,999க்கு வாங்கிச்செல்லலாம்.
மேலும் படிக்க | சாம்சங்கின் பெரிய அறிவிப்பு..! AI உங்களுக்கு பதிலாக இனி போனில் பேசும்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ