Amazon Prime Day Sale: பல வித பொருட்களில் பக்காவான தள்ளுபடி.. ஜூலை 15..ரெடியா இருங்க

Amazon Prime Day Sale:  2 நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை பல பொருட்களுக்கு பல வித தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 13, 2023, 10:52 AM IST
  • அமேசான் பிரைம் டே விற்பனை தேதி.
  • இந்த புதிய தயாரிப்புகள் அறிமுகம் ஆகும்.
  • அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
Amazon Prime Day Sale: பல வித பொருட்களில் பக்காவான தள்ளுபடி.. ஜூலை 15..ரெடியா இருங்க title=

அமேசான் பிரைம் டே விற்பனை: ஈ-காமர்ஸ் தளமான அமேசான் அதன் பிரைம் டே விற்பனைக்கு (Prime Day Sale) தயாராக உள்ளது. இந்த விற்பனையில், நிறுவனம் பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்கியுள்ளது. அதாவது, 2 நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை பல பொருட்களுக்கு பல வித தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். கூடுதலாக, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் இந்த விற்பனையின் போது தனித்தனியாக 10% தள்ளுபடியைப் பெறுவார்கள். இந்த சலுகைகளை எப்படிப் பெறுவது என்று இந்த பதிவில் காணலாம். 

அமேசான் பிரைம் டே விற்பனை தேதி

அமேசானின் இந்த விற்பனை குறித்த பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த விற்பனையின் சலசலப்பை நீண்ட காலமாக அமேசான் உருவாக்கியுள்ளது. இப்போது அதன் தேதியும் நெருங்கிவிட்டது. அமேசான் பிரைம் டே விற்பனை 2023 தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இந்த விற்பனை ஜூலை 15, 2023 அன்று காலை 12 மணிக்கு தொடங்கி 16 ஜூலை 2023 வரை நடைபெறும். விற்பனையின் போது, ​​புதிய ஸ்மார்ட்போன், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன் பொருட்கள், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள் போன்ற அனைத்து வகைகளின் தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியுடன் வாங்க முடியும்.

இந்த புதிய தயாரிப்புகள் அறிமுகம் ஆகும்

இந்த விற்பனையின் போது, ​​புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பல ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3), மோடோ ரேஸர் 40 அல்ட்ரா ( Moto Razr 40 Ultra), சாம்சங் கேலக்சி கேலக்சி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) மற்றும் ரியல்மீ நார்சோ 60 ( Realme Narzo 60) தொடர் போன்கள் அடங்கும்.

அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? 

எப்போதும் போல, இந்த விற்பனையிலும் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் கூடுதல் பலன்களைப் பெறுகின்றனர். இந்த முறையும் இவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் இந்தக் விற்பனையில் முன்கூட்டியே அணுகலைப் பெறுவார்கள். அதாவது, ஜூலை 15 முதல் பொதுமக்களுக்கான விற்பனை தொடங்கும். மறுபுறம், பிரைம் உறுப்பினர்கள் இந்த விற்பனையை ஒரு நாள் முன்னதாக அதாவது ஜூலை 14 முதல் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிரைம் உறுப்பினர்கள் இந்த விற்பனையின் போது கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் தள்ளுபடிகளையும் ஒரு நாள் முன்னதாகவே பெறுவார்கள்.

மேலும் படிக்க | கல்விக் கடன் வாங்குவது எப்படி? நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

எதில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படும்

- ஸ்மார்ட்போன்கள், துணைக்கருவிகள் - 40%

- எலக்ட்ரானிக்ஸ், துணைக்கருவிகள் - 75%

- வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை பொருட்கள் - 70%

- ஸ்மார்ட் டிவி, ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசி - 65%

- அலெக்சா, ஃபயர் டிவி மற்றும் எக்கோ - 55%

இவை அனைத்தையும் தவிர, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனையின் போது தனித்தனியாக 10% தள்ளுபடி கிடைக்கும்.

இந்த தயாரிப்புகளுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும்

ஐபோன் 14 இல் கிடைக்கும் தள்ளுபடி சலுகை பற்றிய தகவலை அமேசான் சமீபத்தில் வெளியிட்டது. விற்பனையின் போது, ​​ரூ.79,999 மதிப்புள்ள ஐபோன் 14ஐ வெறும் ரூ. 66,499 -க்கு வாங்கலாம். இந்த விற்பனையின் போது, Realme Narzo 60 Pro 5G ஸ்மார்ட்போனை ரூ. 22,499 -க்கும், OnePlus Nord 3 போனை ரூ.32,999 -க்கும், ​​Motorola Razr 40 Ultra போனை ரூ.82,999 -க்கும், Tecno Camon 20 Premier போனை ரூ. 28,999 -க்கும், Samsung Galaxy M34 5G ஃபோனை ரூ. 16,999 -க்கும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 

மேலும் படிக்க | ரூ. 25 ஆயிரத்திற்கு கீழ் மிரட்டும் வசதிகளுடன் ஸ்மார்ட்போன்... டாப் 5 மாடல்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News