Flipkart Big Saving Days: வெறும் ரூ. 740-க்கு சாம்சங் ஸ்மார்ட் டிவி, நம்புங்க..உண்மைதான்

Flipkart Big Saving Days: நம்பமுடியாத மிக மலிவான விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க, பிளிப்கார்ட் மிக அற்புதமான ஒரு சலுகையை அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 21, 2022, 01:03 PM IST
  • பல வித அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவி-களின் விலை மிக அதிகமாக இருப்பது வழக்கம்.
  • இந்த விற்பனையில், ஸ்மார்ட் டிவி மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது.
  • ரூ.19,000 மதிப்புள்ள டிவியை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.740க்கு வாங்க வாய்ப்பு உள்ளது.
Flipkart Big Saving Days: வெறும் ரூ. 740-க்கு சாம்சங் ஸ்மார்ட் டிவி, நம்புங்க..உண்மைதான் title=

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் பிக் சேவிங் டேஸ் சேல் நடந்து வருகிறது. இந்த விற்பனை டிசம்பர் 16 அன்று தொடங்கியது. இன்று அதாவது டிசம்பர் 21 விற்பனையின் கடைசி நாளாகும். இந்த அட்டகாசமான விற்பனையில், ​​ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் காரணமாக அதிக பயனர்கள் குறைந்த விலையில் அதிக பொருட்களை அள்ளிச்செல்கின்றனர். 

பொதுவாக, பல வித அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவி-களின் விலை மிக அதிகமாக இருப்பது வழக்கம். எனினும், இந்த விற்பனையில், ஸ்மார்ட் டிவி மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. சாம்சங்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவாக கிடைக்கிறது. ரூ.19,000 மதிப்புள்ள டிவியை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.740க்கு வாங்க வாய்ப்பு உள்ளது. 

Flipkart Big Saving Days: Samsung 32 Inch Smart TV சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் எம்ஆர்பி ரூ.18,900 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த டிவி வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,990க்கு கிடைக்கிறது. டிவியில் 31% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இதன் காரணமாக டிவியின் விலை கணிசமாகக் குறைக்கப்படும்.

மேலும் படிக்க | Amazon Sale Today: எல்ஜி 55 இன்ச் டிவிகளுக்கு 60% வரை தள்ளுபடி 

Flipkart Big Saving Days: Samsung 32 Inch Smart TV வங்கி சலுகை

சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க, வாடிக்கையாளர்கள் கோடக் வங்கி கார்டைப் பயன்படுத்தினால், 1,250 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு டிவியின் விலை ரூ.11,740 ஆக குறையும். இதுமட்டுமின்றி, இந்த விற்பனையில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகை, அதாவது ஒரு பரிமாற்ற சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொண்டால், டிவியின் விலை மேலும் குறைக்கப்படலாம்.

Flipkart Big Saving Days: Samsung 32 Inch Smart TV எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.11,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை அதாவது பரிமாற்ற சலுகையும் கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெற முடியும். எனினும், இந்த தள்ளுபடியை பெற, பழைய டிவி நல்ல நிலையில் இருப்பதையும், லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே 11 ஆயிரம் ரூபாய்க்கான தள்ளுபடி கிடைக்கும். இந்த சேலில் இந்த டிவி-க்கு கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளையும் நீங்கள் பயன்படுத்திக்கொண்டால், இந்த அசத்தலான சாம்சங் டிவி-ஐ வெறும் ரூ.740-க்கு வாங்க முடியும். 

மேலும் படிக்க | இவ்வளவு சிறப்பம்சங்களா? அசத்தும் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News