மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா: இந்தியாவின் முதல் சிஎன்ஜி எஸ்யூவி

மாருதி சுஸுகி நிறுவனம் 2022 மாடல் விட்டாரா பிரெஸ்ஸா சிஎன்ஜியை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2022, 02:43 PM IST
  • மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா
  • இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவி
  • 2022 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா சிஎன்ஜி விலை
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா: இந்தியாவின் முதல் சிஎன்ஜி எஸ்யூவி title=

மாருதி சுஸுகி இந்தியாவில் டீசல் கார்களை விற்பனை செய்வதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டது, அதற்கு பதிலாக நிறுவனம் தனது முழு கவனத்தையும் சிஎன்ஜி கார்களில் செலுத்தியுள்ளது. அதன்படி 2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் தொடர்பான முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம், 2022 விட்டாரா பிரெஸ்ஸா காரை வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம். இந்த காம்பேக்ட் எஸ்யூவி விற்பனை கடந்த 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உள்ளூர் சந்தையில் செய்யப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் நம்பர் 1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இதற்கிடையில் நிறுவனம் தற்போது, ​​இந்தியாவில் ஆல்டோ, செலிரியோ, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், எர்டிகா மற்றும் ஈகோ ஆகியவற்றின் சிஎன்ஜி வகைகளை விற்பனை செய்து வருகிறது. எனவே 2022 விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகரித்து கொண்டே வரும் போட்டிக்கு, வெகுவாக அப்டேட் செய்யப்பட்டு வரும் புதிய மாடலை சரியான பதிலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Mahindra Atom: நாட்டின் மிக மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம் 

மாருதி சுஸுகி நிறுவனம் பல முக்கிய மாற்றங்களுடன் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய உள்ளது, இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த முறை புதிய காரை விட்டாரா பிரெஸ்ஸா என்ற பெயருக்கு பதிலாக பிரெஸ்ஸா என்ற பெயரில் மட்டுமே வெளியிடப்படும். மாருதி சுஸுகி இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவியுடன் சக்திவாய்ந்த அம்சங்களை வழங்கப் போகிறது, இதில் சிறந்த தரமான கேபின் உள்ளது. இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், மின்சார சன்ரூஃப், துடுப்பு ஷிஃப்டர்கள், வயர்லெஸ் இணைப்பு, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் இது போன்ற பல அம்சங்கள் 2022 பிரெஸ்ஸாவுடன் வழங்கப்பட வாய்ப்புள்ளது. புதிய எஸ்யூவியில் 115 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிப்புறத்தை பொறுத்தவரையில், ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க க்ரில் அமைப்பு, ஷார்ப்பான எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிதாக டிசைன் செய்யப்பட்ட ட்யூயல்-டோன் 16 இன்ச் அலாய் வீல்கள், புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய எல்இடி டெயில்லைட்கள், அப்டேட் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 2022 விட்டாரா பிரெஸ்ஸாவின் இன்டீரியருக்கும், 2022 பலேனோவின் இன்டீரியருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 2022 விட்டாரா பிரெஸ்ஸாவில் மாருதி சுஸுகி நிறுவனம், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போஃடெயின்மெண்ட் சிஸ்டமை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் டிரெய்லரே சும்மா அசத்துதில்ல: ஆனா விலையும் சூப்பர் தான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News