Netflix: ஸ்மார்ட்போனில் விளையாட சிறந்த கேம்கள் தரும் நெட்ஃப்ளிக்ஸ்! என்னவெல்லாம் விளையாடலாம்?

NETFLIX GAMES Latest Update : கேம்களை விளையாட விரும்புபவர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் அருமையான வாய்ப்பைத் தருகிறது. ஸ்மார்ட்போனில் விளையாடக்கூடிய சிறந்த நெட்ஃப்ளிக்ஸ் கேம்களின் பட்டியல் பற்றி தெரிந்துக் கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 20, 2024, 07:31 PM IST
  • நெட்ஃபிக்ஸ் கேம்கள் சந்தாதாரர்களுக்கு இலவசம்
  • ஜிடிஏ வைஸ் சிட்டி, ஜிடிஏ III போன்ற கேம்கள் விளையாட வாய்ப்பு
  • கேம்களை பதிவிறக்கம் செய்து நெட்ஃப்ளிக்ஸ் மூலம் உள்நுழையலாம்
Netflix: ஸ்மார்ட்போனில் விளையாட சிறந்த கேம்கள் தரும் நெட்ஃப்ளிக்ஸ்! என்னவெல்லாம் விளையாடலாம்? title=

நெட்ஃபிக்ஸ் சில சிறந்த ஸ்மார்ட்ஃபோன்களின் ஆதரவைப் பெற்று, ஸ்மார்ட்போன் கேமிங்கின் சூழ்நிலையை மாற்றியுள்ளது. தற்போது, நெட்ஃபிக்ஸ் 80 க்கும் மேற்பட்ட பிரத்தியேக கேம்களை வழங்குகிறது, அவற்றில் சில நேரடியான தலைசிறந்த படைப்புகளாகும். 

கேம்களை விளையாட விரும்புபவர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் அருமையான வாய்ப்பைத் தருகிறது. ஸ்மார்ட்போனில் விளையாடக்கூடிய சிறந்த நெட்ஃப்ளிக்ஸ் கேம்களின் பட்டியல் பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆனால் சந்தா இல்லாமல் எந்த நெட்ஃபிக்ஸ் கேமையும் விளையாட முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவின் குறைந்தபட்ச விலை 149 ரூபாய் தான்.

மான்யூமெண்ட் வேலி (Monument Valley): Monument Valley 3 கேம்ஸ் விளையாடுபவர்கள், இந்த கேமின் முதல் பகுதியை விளையாடியிருந்தால், இந்த விளையாட்டின் இயக்கவியலைப் புரிந்துகொள்ள முடியும். இந்த விளையாட்டில், அப்பாவியான இளவரசிக்கு வழிகாட்டும் போது சிக்கலான சூழ்நிலையைக் கையாள வேண்டும், அதுமட்டுமல்ல, கவனாக விளையாட வேண்டும். இந்த விளையாட்டு, சாகசம், மர்மங்கள் மற்றும் மாயை நிரபீய எட்டு புதிய அத்தியாயங்கள் கொண்டது ஆகும்.

மேலும்படிக்க | குத்துவிளக்கில் குடி கொண்டுள்ள முத்தேவர்கள்! யாருக்கு எந்த பாகம் உரியது?

ஜிடிஏ வைஸ் சிட்டி (GTA Vice City): இந்த கேம்  ஸ்மார்ட்போனில் விளையாடக்கூடியது. இந்த கேம் உங்களை 1980 களுக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு டாமி வெர்செட்டியின் பாத்திரத்தை ஏற்று, குற்றவாளிகள் மற்றும் குண்டர்கள் நிறைந்த உலகில் வலம் வர வேண்டும். உங்கள் பெயரை உருவாக்கி உச்சத்திற்குச் செல்லுங்கள். அருமையான அனுபவத்தைத் தரும் விளையாட்டு இது.

GTA III: இது ராக்ஸ்டார் கேம்ஸ் மூலம் GTA V நிலை அனுபவத்தை தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயனர்களுக்கு வழங்குவதற்கான முயற்சியாகும். இந்த விளையாட்டு, உயர் தெளிவுத்திறன் அமைப்பு, எளிதான கட்டுப்பாடுகள் உட்பட பலவற்றைக் கொண்டுள்ளது. இது லிபர்ட்டி சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு யாரை வேண்டுமானாலும் தாக்கலாம்,  எந்த வாகனத்தையும் திருடலாம். அதற்கான அனைத்து அதிகாரமும் உங்களுக்கு உள்ளது.

ஸ்கிரிப்டிங் (Scripting): மாயம் மர்மங்கள் த்ரில்லிங் அனுபவம் பிடித்தவர்களுக்கு ஸ்க்ரிப்டிங் கேம் அருமையானது. ஸ்கிரிப்டிக் கேம் விளையாட்டில், குற்றங்களை சரி செய்வதுடன், சிக்கலான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் பணியும் உங்களுக்கு கிடைக்கும். மற்ற கதாபாத்திரங்களின் தலைவிதியை கூட தீர்மானிக்கலாம். இந்த கேமில் உள்ள அனைத்து விளையாட்டுகளையும் இலவசமாக விளையாடலாம்.

நர்கோஸ் கார்டெல் வார்ஸ் அன்லிமிடெட் (Narcos Cartel Wars Unlimited): நர்கோஸைப் பார்த்த அனைவரும் அதன் விசிறியாகியிருப்பார்கள். நர்கோஸ் கார்டெல் வார்ஸ் அன்லிமிடெட் ஒரு போதைப்பொருள் டான் வாழ்க்கையை வாழ உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இங்கே உத்திகளை நீங்களே முடிவு செய்வீர்கள், ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவீர்கள், தேவைப்படும்போது போரை நடத்தும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. 

மேலும் படிக்க | அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமல் செய்யும் TRAI... மொபைல் பயனர்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News