Twitter tips: மல்டிமீடியா ட்வீட்களில் உள்ளடக்க எச்சரிக்கையை சேர்ப்பது எப்படி?

ட்விட்டர் இப்போது பயனர்கள் மேடையில் புகைப்படம் மற்றும் வீடியோ ட்வீட்களுக்கு உள்ளடக்க எச்சரிக்கை லேபிளை வைக்க அனுமதிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 27, 2022, 08:42 PM IST
  • மல்டிமீடியா ட்வீட்களில் உள்ளடக்க எச்சரிக்கை
  • சமூக ஊடகங்களில் பாதுகாப்புக்கான எச்சரிக்கை
  • விருப்பமில்லா ட்வீட்களில் இருந்து வெளியேறும் வசதி
Twitter tips: மல்டிமீடியா ட்வீட்களில் உள்ளடக்க எச்சரிக்கையை சேர்ப்பது எப்படி?  title=

ட்விட்டர் இப்போது பயனர்கள் மேடையில் புகைப்படம் மற்றும் வீடியோ ட்வீட்களுக்கு உள்ளடக்க எச்சரிக்கை லேபிளை (content warning label) வைக்க அனுமதிக்கிறது.

இந்த எச்சரிக்கைகள் நிர்வாணம், வன்முறை மற்றும் மல்டிமீடியா ட்வீட்களுக்கான "உணர்திறன்" தொடர்பானவைகளாக இருக்கலாம். 

தற்போதைய நிலவரப்படி, இந்த அம்சம் இப்போது  ட்விட்டர்-இன் Android, iOS மற்றும் டெஸ்க்டாப் செயலிகலில் கிடைக்கிறது.  

இப்போது வீடியோ அல்லது போட்டோ ட்வீட்டில் எப்படி எச்சரிக்கை செய்யலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டியை கொடுக்கிறோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

மேலும் படிக்க | சிறுவயதில் பிரிந்த தந்தையை தேடிய மகள்;  24 மணிநேரத்தில் சேர்த்து  வைத்த டிவிட்டர்! 

மல்டிமீடியா ட்வீட்களில் உள்ளடக்க எச்சரிக்கையை எவ்வாறு சேர்ப்பது:
ட்விட்டர் பயன்பாட்டைத் திறந்து, ட்வீட்டை உருவாக்கத் தொடங்குங்கள்.
பதிவை உருவாக்கும் டாஷ்போர்டின் (composition dashboard) மேலே உள்ள ஃபேளேக் ஐகானை (flag icon) சொடுக்கவும்
நிர்வாணம், வன்முறை அல்லது உணர்திறன் போன்ற தெரிவுகள் அங்கு இருக்கும். அவற்றிலிருந்து உங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எச்சரிக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
முடிந்ததும், திரும்பிச் சென்று "ட்வீட்" என்ற தெரிவை சொடுக்கவும்.

மேலும் படிக்க | ‘வசூல் ராஜா MBBS’ பாணியில் நடந்த ஹைடெக் காப்பி..!!

பெயர் குறிப்பிடுவது போலவே, உள்ளடக்க எச்சரிக்கை லேபிள் பார்வையாளர்கள் பார்க்க விரும்பாத அல்லது பாதுகாப்பற்ற இடுகைகளைத் தவிர்க்க அனுமதிக்கும். நிர்வாணம், வன்முறை அல்லது உணர்திறன் உள்ளிட்ட மூன்று எச்சரிக்கை சலுகைகளை Twitter வழங்குகிறது. 

ஒவ்வொரு முறையும் மார்வெல் அல்லது டிசி ஃபிலிம் ரிலீஸ் ஆகும்போது மூவி ஸ்பாய்லர்களைத் தவிர்க்க பயனர்களை அனுமதிக்க “ஸ்பாய்லர்கள்” (spoilers) இன்னும் ஒரு விருப்பம் இருந்திருக்க வேண்டும்.

இதற்கு முன்பு, பார்வையாளர்கள் மீடியாவைக் காண "காண்பி" என்ற தெரிவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இருந்தது.

மேலும், டெக்ஸ்ட் ட்வீட்களில் உள்ளடக்க எச்சரிக்கைகளை வைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, இந்த எச்சரிக்கைகளை TweetDeck இல் பார்க்க முடியாது.

 ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது, இது அவர்கள் ஒரு பகுதியாக இருக்க விரும்பாத பொருத்தமற்ற உரையாடல்களிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள உதவியாக இருக்கும் அம்சம் அது. இந்த அம்சம் "இந்த உரையாடலை விட்டு வெளியேறு" (leave this conversation) அம்சம் என்று அழைக்கப்படும்.

மேலும் படிக்க | நடுவானில் ஒரு அற்புதமான காதல் நடனம்; இது கழுகுகளின் காதல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News