KFON வெளியிட்ட அதிரடி மலிவு விலை திட்டம்: 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி.. மாதம் ரூ.299

KFON New Plan Price List: 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி டேட்டா மற்றும் 20 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை இருக்கும். மாதம் ரூ.299 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.1,794 கட்டணம் வசூலிக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 6, 2023, 05:19 PM IST
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணைய சேவை.
  • இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களின் கிராமங்கள் இணைக்கப்படும்.
  • கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (K-FON – Kerala Fibre Optic Network) திட்டத்தை தொடங்கி வைத்தார்.
KFON வெளியிட்ட அதிரடி மலிவு விலை திட்டம்: 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி.. மாதம் ரூ.299 title=

Kerala Broadband Connection: ஒவ்வொரு வீட்டிற்கும் அதிவேக மற்றும் மலிவு விலையில் இணைய சேவையை வழங்கும் திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று (ஜூன் 5, திங்கள்கிழமை) மாநிலத்தில் கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (K-FON – Kerala Fibre Optic Network) திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையம் வழங்கப்படும் என்றும், மற்ற மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கும் விலையை விட குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கப்படும் என்றும் கேரளா முதலமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது முதல்வர் பினராயி விஜயனால் துவக்கி வைக்கப்பட்ட KFON (கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்) திட்டத்தின் கட்டணத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மற்ற ஒப்பீடும் போது, KFON சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க - Jio offers: ஜியோவின் அதிரடி சிறப்பு ஆபர்! வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

6 மாத காலத்திற்கான 9 திட்டங்களின் கட்டண விவரம் வெளியானது:
20 எம்பிபிஎஸ் வேகத்தில் 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமே மிகக் குறைவான விலை கொண்டது. மாதம் ரூ.299 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.1,794 கட்டணம் வசூலிக்கப்படும். 6 மாதங்களுக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் 3,000 ஜிபி டேட்டா வழங்கும் திட்டமானது ஒரு மாதத்திற்கு ரூ.349 என 6 மாதங்களுக்கு ரூ.2,094-க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 17,412 அலுவலகங்கள் மற்றும் 9,000 வீடுகளில் KFON திட்டத்தின் கீழ் சேவை வாழ்கங்கப்பட்டு உள்ளதாக கேரளா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

KFON திட்டத்தின் கீழ் உள்ள பிற திட்டங்களின் விவரம்:
>> 6 மாதங்களுக்கு 40 Mbps வேகத்தில் 4,000 GB டேட்டா. ஒரு மாதத்திற்கு ரூ. 399 மற்றும் ஆறு மாதத்திற்கு 2394 ரூபாய்.
>> 6 மாதங்களுக்கு 50 Mbps வேகத்தில் 5,000 GB டேட்டா. மற்றும் ஆறு மாதத்திற்கு 2694 ரூபாய் மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ. 449.
>> 6 மாதங்களுக்கு 75 Mbps வேகத்தில் 4,000 GB டேட்டா. ஆறு மாதத்திற்கு 2994 ரூபாய் மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ. 499.
>> 6 மாதங்களுக்கு 100 Mbps வேகத்தில் 5,000 GB டேட்டா. ஆறு மாதத்திற்கு 3594 ரூபாய் மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ. 599.
>> 6 மாதங்களுக்கு 150 Mbps வேகத்தில் 5,000 GB டேட்டா. ஆறு மாதத்திற்கு 4794 ரூபாய் மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ. 799.
>> 6 மாதங்களுக்கு 200 Mbps வேகத்தில் 5,000 GB டேட்டா. ஆறு மாதத்திற்கு ரூ. 5994 மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ. 999.
>> 6 மாதங்களுக்கு 250 Mbps வேகத்தில் 5,000 GB டேட்டா. ஆறு மாதத்திற்கு 7494 ரூபாய் மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ. 1249.

மேலும் படிக்க - தண்ணிக்குள்ள விழுந்தாலும் சூப்பரா வொர்க் ஆகும்..! ஐபோனை அடிச்சு தூக்க வந்த நோக்கியா போன்

20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச இணைய சேவை:
KFON என்பது கேரள மாநில ஐடி உள்கட்டமைப்பு லிமிடெட் மற்றும் கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். KFON திட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச இணைய இணைப்பு வழங்கப்படும். KFON திட்டம் அனைவருக்கும் இலவசம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிபிஎல் குடும்பங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இலவச இணைய அணுகலை வழங்குவது இந்த நெட்வொர்க் திட்டத்த்கின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களின் கிராமங்களையும் இணைக்கப்படும்.

மேலும் படிக்க - ஜியோவின் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட ரீச்சார்ஜ் திட்டம்...! சிறப்பம்சங்கள் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News