இனி ட்விட்டரில் தெறிக்க விட ‘காலா’ பட எமோஜி அறிமுகம்!!

ரஜினியின் ‘காலா’ படத்துக்கு நான்கு மொழிகளில் ட்விட்டர் எமோஜி அறிமுகம்!!

Last Updated : May 28, 2018, 12:22 PM IST
இனி ட்விட்டரில் தெறிக்க விட ‘காலா’ பட எமோஜி அறிமுகம்!! title=

ரஜினியின் ‘காலா’ படத்துக்கு நான்கு மொழிகளில் ட்விட்டர் எமோஜி அறிமுகம்!!
 
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள 

இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.நடிகர் தனுஷின், வொண்டர்பார் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் 'காலா' படம், நெல்லை சீமையில் இருந்து மும்பை போய் செட்டிலாகி, அங்கே தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனாக மாறிய டான் ஒருவரின் கதையை பற்றிப் பேசுகிறது. 

இதில், மும்பை வாழ் தமிழர்களின் காட்ஃ பாதர் கரிகாலன் எனும் காலாவாக நடித்திருக்கிறார் ரஜினி. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'கபாலி'யின் மெகா ஹிட்டுக்குப் பிறகு ரஜினியை இதில் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ரிலீஸ் தேதி நெருங்குவதால், படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப் படுத்த துவங்கியுள்ளனர். இதன் ஆரம்பகட்டமாக ‘காலா’ படத்தின் எமோஜியை அறிமுகம் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் ட்விட்டர்  எமோஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ட்விட்டர் பக்கத்தில், ‘காலா’ என டைப் செய்யும் போது ரஜினிகாந்தின் உருவத்துடன் உள்ள ‘காலா’ எமோஜி கூடவே வரும். 

இதற்கு முன்னதாக விஜய்யின் ‘மெர்சல்’ படத்திற்கு ட்விட்டர் எமோஜி அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது!!

 

Trending News