முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சமீபத்தில் இண்டர்நெட் கட்டணங்களை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜியோவின் அனைத்து ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பூஸ்டர் பேக் என்ற மூன்று புதிய டேட்டா திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
'5G Upgrade' என்னும் பூஸ்டர் திட்டம்
புதிய டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கும் அதாவது. இந்த பூஸ்டர் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 3ஜிபிக்கான 4ஜி டேட்டா சலுகையுடன் சேர்த்து அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் '5G Upgrade' திட்டம் என்னும் பூஸ்டர் திட்டம் உட்பட பல ப்ரீபெய்ட் திட்டங்களையும் ஜியோ நிறுவனம் மாற்றியமைக்க தொடங்கியுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட திட்டங்கள் இப்போது 'True Unlimited Upgrade' பிளான்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பிளான்கள்
மாற்றி அமைக்கப்பட்ட ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பிளான்களின் ஆரம்ப கட்டணம் ரூ.51 என்ற அளவில் தொடங்குகிறது. முன்னதாக, ஜியோ ரூ.61 என்ற கட்டணத்தில் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே வழங்கியது. 239 ரூபாய்க்கும் குறைவான திட்டங்களுக்கு வரம்பற்ற 5 ஜி டேட்டாவை வழங்க, இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மேலும் படிக்க | Flipkart வழங்கும் அதிரடி தள்ளுபடி... iPhone 14-ஐ மலிவு விலை வாங்க வாய்ப்பு..!!
ஜியோ ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பிளான்களுக்கான கட்டண விபரம்
ரிலையன்ஸ் ஜியோ ₹51, ₹101 மற்றும் ₹151 ஆகிய கட்டணத்தில் புதிய 'True Unlimited Upgrade' திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குவது தான், இந்த மூன்று திட்டங்களின் சிறப்பு . மேலும், அவற்றின் வேலிடிட்டி உங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் திட்டத்தின் வேலிடிட்டியை கொண்டிருக்கும்.
ஜியோ ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பிளான் டேட்டா விபரம்
ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள மூன்று திட்டங்களிலும் கூடுதல் 4G டேட்டாவும் கிடைக்கும். ₹51 திட்டத்தில் 3ஜிபி டேட்டாவும், ₹101 திட்டத்தில் 6ஜிபி டேட்டாவும், ₹151 திட்டத்தில் 9ஜிபி 4ஜி டேட்டாவும் கிடைக்கும்.
ஜியோ ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பூஸ்டர் பேக் ரீசாரஜ் செய்யும் முறை
ஜியோ செயலி அல்லது இணையதளம் வாயிலாகவும், யுபிஐ செயலிகள் வாயிலாகவும் இந்த பூஸ்டர் பேக் ரீசார்ஜினை செய்து கொள்ளலாம் என ஜியோ அறிவித்துள்ளது.
கட்டண உயர்வுக்கு பின் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா விபரம்
மேலே குறிப்பிட்ட திட்டங்களின் மூலம் கிட்டத்தட்ட அனைத்து ஜியோ வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யலாம். இருப்பினும், 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டா கொண்ட அனைத்து திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ( unlimited 5G) கிடைத்தாலும், இந்த புதிய திட்டங்கள் தினசரி 1.5ஜிபிக்கும் குறைவான டேட்டாவை தான் கொடுக்கின்றன. ஜியோ ரூ.239 முதல் தொடங்கும் திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். முன்னதாக, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைத்தது. இருப்பினும், கட்டணம் அதிகரிக்கப்பட்ட பிறகு, பயனர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவிற்கான திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ