Jio Cinema: ஜியோ நடத்தும் சிறப்பு போட்டியில் வென்றால் கார் பரிசு...!

ஜியோ சினிமாவின் ஜீதோ தன் தனா தன் போட்டி மே 28 வரை நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு கார் பரிசாக கொடுக்கப்படும். இதில் கார் பரிசாக வெல்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2023, 02:51 PM IST
  • ஜியோ சினிமாவில் சிறப்பு போட்டி
  • வெற்றி பெற்றால் கார் பரிசு
  • போட்டியில் கலந்து கொள்வது எப்படி?
Jio Cinema: ஜியோ நடத்தும் சிறப்பு போட்டியில் வென்றால் கார் பரிசு...!  title=

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது. இந்த முறை அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், 3 அணிகளுக்கான இடம் இன்னும் காலியாக இருக்கிறது. அதற்கான போட்டியில் 6 அணிகள் இருக்கின்றன. இதனையொட்டி ஐபிஎல் பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ சினிமா ஜீதோ தன் தானா தன் போட்டி நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி மே 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்குபெற்றும் வெற்றி பெறும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. அதாவது கார் மற்றும் பிற இன்னபிற பொருட்களை வெல்வதற்கான வாய்ப்பில் இருக்க உங்களுக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது. ஜீதோ தன் தான தான போட்டியில் கலந்து கொண்டு வெற்றியாளராக மாறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க | Realme Narzo N53: ரூ.9000-க்கும் கம்மியான விலையில் ஸ்மார்ட்போன்? இத்தனை சிறப்பம்சங்களா?

ஜீதோ தன் தனா தன் போட்டி எவ்வளவு காலம் நீடிக்கும்?

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ சினிமா அப்ளிகேஷனில் இயங்கும் ஜீதோ தன் தானா தன் போட்டி ஏப்ரல் 8 முதல் மே 28 இறுதிப் போட்டி வரை நடைபெறும். காருடன், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் ஸ்பீக்கர், வயர்லெஸ் இயர்போன்கள், புளூடூத் நெக்பேண்ட் போன்ற பல பரிசுகளையும் இந்தப் போட்டியில் வெல்லலாம்.

போட்டியில் விளையாடுவது எப்படி?

நீங்கள் ஜீதோ தன் தனா தன் போட்டியில் பங்கேற்க விரும்பினால், ஐபிஎல் போட்டியின் போது ஒவ்வொரு போட்டியையும் உங்கள் மொபைல் போனில் போர்ட்ரெய்ட் முறையில் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு கேள்வி தோன்றும். அனைத்து வினாக்களுக்கும் நான்கு தேர்வுகள் வழங்கப்படும். இதில் அதிக கேள்விகளுக்கு பதிலளிக்கும் பயனருக்கு வெற்றியாளராக வாய்ப்பு கிடைக்கும். 

போட்டியில் கலந்து கொள்ளும் வழிமுறை

* முதலில் ஜியோ சினிமா செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
* செயலியை ஒருவர் ஜியோ சினிமாவில் பதிவு செய்ய வேண்டும்.
* பதிவு செய்தவுடன், டாடா ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு ஓவரின் போதும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
* கேள்விக்கு நான்கு விருப்பங்கள் இருக்கும். அதற்கு நீங்கள் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
* நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், நீங்கள் ஒரு பெரிய கார் பெற முடியும்.

ஜீதோ தன் தனா தன் போட்டியின் சிறப்பு அம்சங்கள்

ஜியோ சினிமா போட்டி ஆன்லைன் போட்டியாகும். பயனர்கள் போட்டியில் இலவசமாக பங்கேற்கலாம். போட்டியின் போது ஒவ்வொரு ஓவரிலும் ஒரு கேள்வி கேட்கப்படும், அதாவது மொத்தம் 40 ஓவர்களில் 40 கேள்விகள் கேட்கப்படும். ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றால் கார் பரிசாக வழங்கப்படும்.

மேலும் படிக்க | PhonePe, Paytm மூலம் தவறான நபருக்கு பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News