ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் ப்ரீப்பெய்டு மற்றும் போஸ்ட்பெய்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் டேட்டா ஆட்ஆன் பேக், அன்லிமிடெட் பேக்குகள், வருடாந்திர திட்டங்களை கொண்டுள்ளது. அந்த விகையில் 252 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | Free 4G Jiophone: இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 'ஜியோ போன்' இலவசம்
252 ஜிபி டேட்டா பிளான்
ஜியோவின் 1,199 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த பிளானில் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். 3 ஜிபி முழுவதையும் நீங்கள் பயன்படுத்தி விட்டால். உங்களின் டேட்டா வேகம் 64kbps ஆக குறையும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 252 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.
இது தவிர, ஜியோவின் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகளைச் செய்யலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.
இலவச சந்தா என்ன?
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தாவையும் பெறுவார்கள். இதேபோல், ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,199 திட்டமும் உள்ளது. இதில் தினமும் 3 ஜிபி டேட்டாவை பெறும் வாடிக்கையாளர்கள், Disney + Hotstar பிரீமியம் சந்தாவை கூடுதலாக பெறுவார்கள். இந்த ப்ரீபெய்ட் பேக்கில் அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.601 திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.
மேலும் படிக்க | ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவாக நோக்கியா ஸ்மார்ட்போன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR