Internet Calling: இலவச வாட்ஸ்அப் காலிங் முடிவுக்கு வருகிறதா..!!

தற்போது வாட்ஸ்அப் அழைப்புககளுக்கு  கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் வரும் காலங்களில், வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 25, 2022, 02:10 PM IST
  • தற்போது வாட்ஸ்அப் அழைப்புககளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.
  • WhatsApp அழைப்புகள் இனி இலவசமாக இருக்காது.
  • செயலி மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு பணம் எதுவும் செலுத்துவதில்லை.
Internet Calling: இலவச வாட்ஸ்அப் காலிங் முடிவுக்கு வருகிறதா..!!  title=

இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022: வாட்ஸ்அப் அழைப்புகள் தற்போது  இலவசம் தான். ஆனால் இனி வரும் காலங்களில் இணைய அழைப்புக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 என்ற புதிய மசோதாவை அரசு கொண்டு வருகிறது. இதற்கான வரைவு மசோதா முழுமையாக தயாரிக்கப்பட்டு விட்டது. இதில் டெலிகாம் தொடர்பான பல மாற்றங்களும் அடங்கிய நிலையில், இணைய அழைப்பு தொடர்பாகவும் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதை அடுத்து சமூக ஊடக செயலிகள் மூலம் செய்யப்படும் அழைப்புகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்..

இணைய அழைப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா?

அழைப்பு மற்றும் செய்தியிடல் வசதிகளை வழங்கும் வாட்ஸ்அப், ஸ்கைப், ஜூம் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் செயல்பாடுகள் தொடர்பாக பல மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த தளங்கள் இனி இந்தியாவில் செயல்பட தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் போல உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ர வகையில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த காரணத்திற்காக, இந்த  செயலிகளில் இருந்து அழைப்புகளை மேற்கொள்ள பயனர்கள் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

WhatsApp அழைப்புகள் இனி இலவசமாக இருக்காது

தற்போது, ​​வாட்ஸ்அப் அழைப்பு இலவசம். செயலி மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு  பணம் எதுவும் செலுத்துவதில்லை. ஆனால்  இணைய பயன்பாட்டிற்கு, டேட்டா கட்டணமாக செலுத்துகிறோம். ஆனால், இப்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, உரிமம் வழங்குவதற்கான நடைமுறை கொண்டு வரப்பட்டால், பயனர்கள் இணைய கட்டணத்துடன், செயலிகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது இது பற்றி எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் படிக்க | ரெட்மி நோட் 11டி ப்ரோ போனில் தீ பற்றி எரியும் வீடியோ வைரல்!

இந்த மசோதாவின் கீழ் டெலிகாம் ஆபரேட்டர்கள் பின்பற்றும் விதிகளைப் போலவே, செயலிகளும் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த மசோதாவில் OTT இயங்குதளங்களுக்கும் புதிய விதிகள் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Tips and Ticks: வாட்ஸ்அப் மூலம் சுலபமாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News