Instaவில் இனி வீடியோ அப்லோடு செய்ய முடியாது! - வந்தாச்சு புது ரூல்ஸ்! நெட்டிசன்ஸ் குழப்பம்!

இன்ஸ்டாகிராமில் தனி வீடியோ பதிவுகள் அப்லோடு செய்யப்படுவதை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 3, 2022, 06:59 PM IST
  • இன்ஸ்டாகிராமில் வீடியோ அப்லோடை நிறுத்த திட்டம்.
  • பப்ளிக் ரீல்ஸ்களை மற்றவர்கள் ரீமிக்ஸ் செய்துகொள்ளலாம்.
  • அனைத்துப் பயனர்களுக்கும் இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
Instaவில் இனி வீடியோ அப்லோடு செய்ய முடியாது! - வந்தாச்சு புது ரூல்ஸ்! நெட்டிசன்ஸ் குழப்பம்! title=

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் நாட்டில் இன்ஸ்டாகிராமின் வளர்ச்சி விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது.

பயனர்களை அதிகரிக்கும் வகையிலும் ஏற்கெனவே பயன்படுத்திவருவோரைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாகவும் பல்வேறு புதிய அம்சங்கள், வசதிகளை இன்ஸ்டாகிராம் வழங்கிவருகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவுகள் அப்லோடு செய்யும் முறையை முற்றாக நிறுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். அதாவது பயனர்கள் வெளியிடும் அனைத்து வீடியோ பதிவுகளும் இனி ரீல்ஸ் வீடியோவாக மட்டுமே அப்லோடு ஆகுமாம். சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை யூடியூப்பில் வீடியோக்களைவிட ஷார்ட்ஸ் அதிக எங்கேஜ்மெண்டுகளைப் பெறுகிறது. 

அதேபோல இன்ஸ்டாகிராமை எடுத்துக்கொண்டால் வழக்கமான வீடியோக்களைவிட இதில் போடப்படும் ரீல்ஸ் அதிக பேரைச் சென்றடைவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இனி அனைத்து வீடியோ பதிவுகளையுமே ரீல்ஸாக மாற்ற அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளதாம்.

ஆனால், ஏற்கெனவே அப்லோடு செய்யப்பட்ட வீடியோக்களும் ரீல்ஸாக மாறுமா அல்லது பழைய வடிவிலேயே இருக்குமா எனும் விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த 'புதிய' சிக்கல்! - வேற ரூட் போடும் இ.பி.எஸ் தரப்பு!

 

அதேபோல மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அது என்னவெனில், நீங்கள் பப்ளிக்கில் பதிவிடும் ரீல்ஸ்களை மற்றவர்கள் ரீமிக்ஸ் செய்துகொள்ளமுடியுமாம். உங்களது ரீல்ஸ்களை வேறு யாரும் ரீமிக்ஸ் செய்யக்கூடாது என்றால் உங்களது ஃபாலோயர்கள் மட்டும் பார்க்கும்படி செட்டிங்ஸில் செட் செய்துகொள்ளலாமாம்.

இன்ஸ்டாகிராமின் இந்த புதிய திட்டம் பரிசோதனை முயற்சியாக ஒரு சிலரிடம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அன்று விஜயகாந்த்; இன்று கமல்! இடிக்கப்படுகிறதா ஆழ்வார்பேட்டை ஆபீஸ்? பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News