Illegal Loan App: கடன் வாங்காதவர்களுக்கும் தொல்லை கொடுக்கும் சீன செயலிகள்! எச்சரிக்கை

செயலிகள் மூலம் கடன் பெறுவதில் நீங்கள் கவனமாக இருக்காவிட்டால், பின்விளைவுகளை கடுமையாக சந்திக்க வேண்டியிருக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2022, 12:16 PM IST
  • மோசடி லோன் செயலிகளின் வலையில் விழுந்துவிடாதீர்கள்
  • வாடிக்கையாளர்களை இப்படி தான் பொறி வைத்து பிடிக்கின்றன
Illegal Loan App: கடன் வாங்காதவர்களுக்கும் தொல்லை கொடுக்கும் சீன செயலிகள்! எச்சரிக்கை title=

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா உட்சக்கட்டத்தில் இருந்தபோது இந்தியாவில் உடனடி கடன் என்ற பெயரில் சீன செயலிகள் நுழைந்தன. இந்த சட்டவிரோத கடன் செயலிகளின் தொல்லையால், பலர் தங்கள் உயிரைக் இழக்க வேண்டியிருந்தது. பலர் கடனை விட பல மடங்கு பணத்தைக் கொடுத்து கடன் வலையில் சிக்கிக் கொண்டனர். இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், கடன் செயலிகளின் மிரட்டல்கள் கொஞ்ச நாட்களுக்கு காணாமல் போயிருந்தன. ஆனால் மீண்டும் சீன கடன் செயலிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த முறை அவை முன்பை விட ஆபத்தான முறையில் திரும்பி வந்துள்ளன.

இப்போது தங்களிடம் கடன் வாங்காதவர்களையும் சிக்க வைக்கிறார்கள். நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இதுபோன்ற எண்ணற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர்களின் வலையில் நீங்கள் சிக்காமல் இருப்பதற்கான வழியை இன்று நாங்கள் உங்களுக்கு கூறுவோம்.

மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் பணத்தை சுருட்டும் நிறுவனம்; அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்

எப்படி ஏமாற்றுகிறார்கள்?

இந்த போலி கடன் செயலிகளின் நபர்கள், அவர்களிடம் கடன் வாங்காதவர்களையும், தங்கள் செயலியை பதிவிறக்கம் செய்யாதவர்களையும் கூட இப்போது ஏமாற்றத் தொடங்கியுள்ளனர். கடன் வாங்காதபோது எப்படி சித்திரவதை செய்யப்படுகிறார்கள்? என நீங்கள் நினைக்கலாம். அதற்கு அவர்கள் கையில் எடுக்கும் புத்திசாலித்தனமான செயல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மோசடி செய்பவர்கள் முதலில் வெவ்வேறு ஏஜென்சிகளிடமிருந்து பல மொபைல் எண்களைத் திருடுகிறார்கள். இந்த எண்களில், செலுத்த வேண்டிய பணம் தொடர்பான வாட்ஸ்அப் செய்திகள் ஒவ்வொன்றாக பதிவிடப்படுகின்றன. மேலும், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து ஒரு இணைப்பு கொடுக்கப்படுகிறது. நீங்கள் ஆர்வத்துடன் இணைப்பைக் கிளிக் செய்தீர்கள் என்றால், மோசடி செய்பவர்களின் வலையில் விழுந்துவிடுவீர்கள். இப்படி தான் மோசடி நபர்களின் வலையில் விழுகிறார்கள். 

அப்படி விழுந்தவர்களை முதலில் தொலைபேசி மூலம் மிரட்டத் தொடங்குகிறார்கள். இதன் பிறகும் பணம் கிடைக்கவில்லை என்றால் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்து அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். அப்படியும் பணம் வரவில்லை என்றால் ஆபாசமாக போட்டோவை வைரலாக்கி விடுகிறார்கள்.

கவனமாக இருக்க செய்ய வேண்டியவை

இந்த வகையான மோசடியைத் தவிர்க்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

* முதலாவதாக, இந்த வகையான உடனடி கடன் பயன்பாட்டில் பணம் எடுக்காமல் இருப்பது நல்லது. அவர்களுக்கு எந்த பதிலையும் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

* நீங்கள் எந்தக் கடனும் வாங்கவில்லை என்றால், பயப்படத் தேவையில்லை. ஏனெனில் இந்த நிறுவனங்கள் சட்டப்பூர்வமானவை அல்ல. அவை மோசடியானவை. எனவே அவர்கள் உங்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. சட்ட நடவடிக்கையைத் தவிர வேறு எந்தச் செயலுக்கும் பயப்பட வேண்டாம்.

* மோசடி லிங்குகளை தவிர்ப்பது நல்லது. அதனை உங்கள் மொபைலில் இருந்து டெலிட் செய்துவிடுங்கள். அந்த லிங்கை கிளிக் செய்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆபத்துகள் வரத் தொடங்கும். 

மேலும் படிக்க | அமேசான் - பிளிப்கார்ட்டை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News