Rashmika Mandanna Viral Video: இன்ஸ்டாகிராம், X உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது நடிகை ராஷ்மிகாவின் (?) வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகாவே இல்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளது. லிஃப்டில் வரும் ராஷ்மிகாவின் அந்த வீடியோ டீப்ஃபேக் தொழில்நுட்பம் (Deepfake Technology) மூலம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ உண்மை என நம்பப்பட்ட இந்த வீடியோ X தளத்தில் மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை தாண்டியுள்ளது. மேலும், இந்த வீடியோ போலியானது என்பதை ஊடகவியலாளரான அபிஷேக் அவரது X பக்கத்தில் விளக்கி, அதனை உறுதி செய்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா இருப்பது போலிருக்கும் வீடியோவையும், அந்த வீடியோவின் உண்மையான வீடியோவையும் பகிர்ந்து டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் இது மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
There is an urgent need for a legal and regulatory framework to deal with deepfake in India.
You might have seen this viral video of actress Rashmika Mandanna on Instagram. But wait, this is a deepfake video of Zara Patel.
This thread contains the actual video. (1/3) pic.twitter.com/SidP1Xa4sT
— Abhishek (@AbhishekSay) November 5, 2023
மேலும் படிக்க | 16 வயது இந்திய பெண்ணின் AI நிறுவனம்... இப்போ அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
அபிஷேக் மூன்று பதிவாக இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில்,"இந்தியாவில் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை கையாள்வதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் அவசரத் தேவை உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இந்த வைரல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இது ஜாரா பட்டேலின் (Zara Patel) டீப்ஃபேக் வீடியோ. இந்த தொடர் பதிவில் உண்மையான வீடியோவும் உள்ளது" என்றார்.
மேலும் அந்த பதிவில்,"இன்ஸ்டாகிராமில் 415K (சுமார் நான்கு லட்சத்து 15 ஆயிரம் பேர்) பின்தொடர்பவர்களை கொண்ட பிரிட்டிஷ் இந்தியப் பெண்ணான ஜாரா படேலின் உண்மையான வீடியோ. அவர் இந்த வீடியோவை அக்டோபர் 9 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார்" என குறிப்பிட்டுள்ளார்.
information https://t.co/WHk5rxsNYj
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023
டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், சாதாரண சமூக ஊடகப் பயனர்களுக்கு வைரல் வீடியோ ராஷ்மிகா உடையதுதான் என்பதை நம்ப போதுமானதாக இருக்கிறது. ஆனால் நீங்கள் வீடியோவை கவனமாகப் பார்த்தால், (0:01 வினாடியில்) ராஷ்மிகா (டீப்ஃபேக்) லிப்டில் நுழையும் போது, திடீரென அவரது முகம் வேறொரு பெண்ணில் இருந்து ராஷ்மிகாவின் முகமாக மாறுவதை நீங்கள் காணலாம்" என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், இந்த வீடியோ டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டுள்ளது என்பதை அவர் உறுதிசெய்துள்ளார்.
From a deepfake POV, the viral video is perfect enough for ordinary social media users to fall for it. But if you watch the video carefully, you can see at (0:01) that when Rashmika (deepfake) was entering the lift, suddenly her face changes from the other girl to Rashmika. (3/3)
— Abhishek (@AbhishekSay) November 5, 2023
அபிஷேக்கின் இந்த பதிவை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில் 'Information' என குறிப்பிட்டு அனைத்து பயனர்களும் இதனை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை பகிர்ந்திருப்பதாக தெரிகிறது. மேலும், ராஷ்மிகாவின் வைரல் வீடியோவை பார்த்த அனைவரும் இது அவரின் வீடியோதான் என்று நம்பிவிட்டதாகவும் கமெண்ட் பிரிவில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சாட்ஜிபிடி கூட இனி பேசலாம்... இமேஜ் போட்டாலும் பதில் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ