இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் Search Engine கூகுள். இதனைப் பயன்படுத்துபவர்கள் லேட்டஸ்டாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கூகுள் நிறுவனம் Google Chrome தேடுபொறியில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பிரைவசி பாலிசியில் முக்கியமான சில அப்டேட்டுகளை கூகுள் கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன்பு உங்கள் மொபைலில் இருக்கும் கூகுள் ஹிஸ்டிரியை மட்டும் நீங்கள் டெலிட் செய்து வந்திருப்பீர்கள். ஆனால், Chrome 97 என வெளியிடப்பட்டுள்ள லேட்டஸ்ட் வெர்சன் கூகுள் குரோமில், வெப்சைட்டுகளில் பதிவாகும் உங்களின் டேட்டாக்களையும் நீங்கள் டெலிட் செய்து கொள்ள முடியும். அதாவது, உலகளவில் தனியுரிமை சார்ந்த பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்த புதிய அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது.
ALSO READ | Tata கார்களில் அதிரடி தள்ளுபடி: இந்த மாதம் கிடைக்கும் எக்கச்சக்க சலுகைகள்
நீங்கள் எந்தவொரு வெப்சைட்டுக்கு சென்றாலும், அங்கு உங்களின் தகவல் சேகரிக்கப்பட்டிருந்தால், கூகுள் குரோம் தேடு பொறியின் செட்டிங்ஸிலேயே நீங்கள் அந்த டேட்டாக்களை டெலிட் செய்து கொள்ள முடியும். தற்போது MAC, Linux ஆகிய சிஸ்டம்களுக்கு இந்த அப்டேட்டைக் கொடுத்துள்ள கூகுள், விரைவில் அனைத்து யூசர்களுக்கும் கொடுக்க உள்ளது.
ALSO READ | Google Chrome யூசர்களுக்கு Alert! அப்பாவிகளை குறி வைக்கும் Hackers; அரசு எச்சரிக்கை
புதிய அப்டேட்டை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
1. Settings > Security and Privacy > Site Settings > View Permissions என்ற ஆப்சன்களில் வரிசையாக செல்ல வேண்டும்.
2. அதாவது முதலில் Google Chrome ஐத் திறந்து Settings -களுக்கு செல்ல வேண்டும்.
3. Security and Privacy என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. பின்னர், Site Settings என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. அதில், எந்தெந்த தளங்களுக்கு உங்கள் டேட்டாவை சேமித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் (View Permissions) என்ற தகவல் காட்டும்.
6. இப்போது, தவறான தளங்கள் உங்கள் தகவலை சேமித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த தளத்துக்கு நேராக அம்புக்குறியை வைத்து கிளிக் செய்து Clear Data -வைக் கொடுத்து டெலிட் செய்யுங்கள்.
7. உங்களின் தனியுரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும். இதன்மூலம் தவறான தளங்களில் உங்கள் டேட்டா சேமிப்பது தடுக்கப்படும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR