Mobile Data மூலம் Call செய்வது எப்படி? எளிய வழி அறிமுகம்!

இந்தியாவில் முதல் முறையாக, இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2018, 05:43 PM IST
Mobile Data மூலம் Call செய்வது எப்படி? எளிய வழி அறிமுகம்! title=

இந்தியாவில் முதல் முறையாக, இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது!

மொபைல் டேட்டா எனப்படும் இணைய டேட்டாவினை பயன்படுத்தி, BSNL மொபைல் எண்களின் மூலம் இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு மொபைல் எண்ணுக்கும் அழைப்புகளை ஏற்படுத்தும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது.

BSNL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான Wings என்னும் செயலியின் மூலம் இணைய வசதிகளை (Wifi, Mobile Data) கொண்டு பிற நெட்வொர்கள் எண்களுக்கு அழைப்புகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இணைய வசதியினை கொண்டு பிரத்தியேக செயலிகள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அந்த அழைப்புகளின் இருப்புறமும் குறிப்பிடப்பட்ட செயலி அவசியமாக கருதப்பட்டது, ஆனால் இந்த Wings செயலியின் மூலம் மொபைல் எண்ணில் மூலமே அழைப்புகளை ஏற்படுத்தலாம்.

இந்த செயலியை கடந்த ஜூலை மாதம் தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ் குமார் அறிமுகம் செய்து வைத்தார். 

இந்த செயலியில் அழைப்புகளை மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்னுடன் https://sancharaadhaar.bsnl.co.in/Wings/Login.do என்ற வலைப்பக்க இணைப்பில் பதிவு செய்துக்கொண்டு பயனடையலாம்.

ரூ.1099/- னை ஒருமுறை கட்டணமாக செலுத்தி வாடிக்கையாளர்கள் இந்த வசதியினை தங்களது மொபைல் BSNL எண்ணில் செயல்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News