ஜியோ சிம்மை ரீசார்ஜ் செய்யாமல் இத்தனை நாட்கள் யூஸ் பண்ணலாமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஜியோ, இந்தியாவில் 4G LTE மொபைல் நெட்வொர்க் மற்றும் VoLTE சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 5, 2023, 06:48 AM IST
  • ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி காலாவதியாகும் வரை சேவைகள் இயங்கும்.
  • ப்ரீபெய்டு திட்டம் என்பது சேவைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் பணத்தை செலுத்துவதாகும்.
  • போஸ்ட்பெய்டு திட்டம் என்பது சேவைகளை பயன்படுத்திய பின்னர் பணத்தை செலுத்துவதாகும்.
ஜியோ சிம்மை ரீசார்ஜ் செய்யாமல் இத்தனை நாட்கள் யூஸ் பண்ணலாமா? title=

கடந்த சில ஆண்டுகளில் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறது.  பல முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக ஜியோ களமிறங்கி, கவர்ச்சிகரமான பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி பல வாடிக்கையாளர்களை தன் வசம் கவர்ந்துள்ளது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஜியோ, இந்தியாவில் 4G LTE மொபைல் நெட்வொர்க் மற்றும் VoLTE சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.  ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்பு, டேட்டா திட்டங்கள், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சலுகைகள், சர்வதேச ரோமிங் போன்ற பல சலுகைகளை ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் வழங்கி வருகிறது.  பொதுவாக ரீசார்ஜ் செய்து அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட பேக்கின் வேலிடிட்டி முடிவடைந்ததும் அதன் சேவைகளும் முடிந்துவிடும், சேவைகளை தொடர வேண்டும் என்றால் நாம் மறுபடியும் ரீசார்ஜ் செய்யவேண்டும்.  ஆனால் ஜியோவில் வழங்கப்படும் முக்கியமான சலுகை என்னவென்றால் ரீசார்ஜ் பேக்கிங் வேலிடிட்டி முடிவடைந்து கூட சில நாட்களுக்கு ஜியோ வழங்கும் சேவைகளை நம்மால் தொடர முடியும்.  

மேலும் படிக்க | Netflix: ரூ.200-ஐ விட குறைந்த விலையில் அசத்தலான பிளான், விவரம் இதோ

ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியான பிறகு அதன் பயனர்களுக்கு 90 நாட்கள் வரையில் சலுகைக் காலத்தை வழங்குகிறது.  இந்த அவகாசத்தில் ஜியோ பயனர்கள்  ரீசார்ஜ் செய்துகொள்ளலாம், இந்த 90 நாட்களுக்குள் அவர்களது எண்கள் சேவைகளை இழக்காமல் இருக்கும்.  இந்த சலுகை காலத்தை வழங்குவதன் மூலம் ஜியோ நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களிலிருந்து தனித்து நிற்கிறது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டங்கள் என்பது வாடிக்கையாளர்கள் சேவைகளை பெறுவதற்கு முன்னரே பணத்தை செலுத்த வேண்டிய திட்டமாகும்.  இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலாவதியாகும் வரை சேவைகள் இயங்கும்.  அதேபோல போஸ்ட்பெய்ட் திட்டங்கள் என்பது வாடிக்கையாளர்கள் சேவைகளை பயன்படுத்திய பிறகு  பணம் செலுத்துவதாகும்.  

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது.  ரூ.149 மற்றும் முதல் ரூ.2,199 வரை விலை மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ வழங்கி வருகிறது.  28 நாட்கள் முதல் 84 நாட்கள் வரையிலான வேலிடிட்டிகளை கொண்டிருக்கும் இந்த திட்டம் டேட்டா, இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  அதனை தொடர்ந்து ஜியோ ரூ.199 முதல் ரூ.999 வரை விலை மதிப்புள்ள போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது.  28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டங்கள் டேட்டா, இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

மேலும் படிக்க | வந்தாச்சு அப்டேட்… வாட்ஸ்அப்பில் இந்த புதிய வசதி அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News