Bajaj Pulsar NS400: பல்சர் பைக் வாங்க வேண்டும் என்பது இந்திய இளைஞர்களின் கனவுகளில் ஒன்று என கூறலாம். பொல்லாதவன் படத்தில் தனுஷ் பல்சர் பைக் வாங்குவதற்கு முன்பிருந்த இங்கு பல்சர் 'பைத்தியங்களை' நாம் பார்த்திருப்போம். பல்சர் பைக்கை சாலையில் எங்காவது பார்த்தால் அதை கண்கொட்டாமல் பார்த்து பெருமூச்சுவிடும் இளைஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் தங்களின் பெயரில் NS, RS என பல்சரின் துணை பெயர்களை வைத்திருக்கும் நபர்களை நீங்களும் உங்கள் பிரண்ட் லிஸ்டில் வைத்திருப்பீர்கள்.
அந்த வகையில், பஜாஜ் பல்சரின் புதிய மாடல் விரைவில் அறிமுகமாக உள்ளது என என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். பஜாத் பல்சரின் NS400 பைக் எப்போது அறிமுகமாகிறது, அதன் விலை, மைலேஜ் போன்ற இதர சிறப்பம்சங்கள் என்ன என்பதை இதில் காணலாம். இந்த விவரங்களை உங்களின் பெற்றோரிடமோ/மனைவியிடமோ/கணவனிடமோ/பாய் பிரண்டிடமோ/ கேர்ள் பிரண்டிடமோ காண்பித்து இந்த பைக்கை வாங்கித்தரும்படி அடம்பிடியுங்கள், பல்சர் பைத்தியங்களே....
மேலும் படிக்க | Honda CB300R: ஹோண்டாவின் சக்திவாய்ந்த பைக்... விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!
முக்கிய அம்சங்கள்
373.3சிசி லிக்விட்-கூல்டு எஞ்சின், 40PS பவர் மற்றும் 35Nm டார்க் உற்பத்தி ஆகியவை இந்த பஜாஜ் பல்சர் NS400 பைக்கில் முக்கியத்துவம் வாய்ந்து என கூறப்படுகிறது. பஜாஜ் மற்றும் கேடிஎம் (KTM) இணைந்து இந்த எஞ்சின் உருவாக்கி உள்ளது.
பல்சர் சீரிஸில் இந்த சோதனை செய்யப்பட்ட பவர் பிளாண்ட்டை இணைந்துள்ளது. இதன் மூலம், KTM 390 Duke பைக்கின் மாற்று 399cc இன்ஜின் விலை அதிகமென்பதால், பஜாஜ் அதன் சலுகைகளை அதிகரிக்கவும், மலிவு விலையில் பைக்கை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
எப்போது ரிலீஸ்?
பஜாஜ் பல்சர் NS400 பைக்கின் விலை சுமார் ரூ. 1.70 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நல்ல பட்ஜெட்டில் ஸ்போர்ட்ஸ் பைக் தேடுபவர்களுக்கு பல்சர் NS400 சிறந்த தேர்வாக இருக்கலாம். இருப்பினும், இதன் வெளியீட்டு தேதி என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. பஜாஜ் நிறுவனம் இந்த தேதியை அறிவிப்பதில் மிகவும் ரகசியமாக செயல்படுகிறது. இருப்பினும் இந்த பைக் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
கவனத்தில் கொள்க...
பஜாஜ் நிறுவனத்தின் இந்த பல்சர் NS400 பைக், NS200 மாடலில் இருந்து வலுவான சுற்றளவு Chassis (பைக்கின் கூடு என்று பொருள் கொள்ளலாம்) பெறும். இது NS200 மாடல் பைக்கின் 25hp வெளியீட்டை விட அதிக ஆற்றலைக் கையாளும் திறனை எப்போதும் வெளிப்படுத்துகிறது. பெரிய எஞ்சினுக்கான சேஸை வலுப்படுத்த மாற்றங்கள் செய்யப்பட்டாலும், ஒட்டுமொத்த அளவு மற்றும் விகிதாச்சாரங்கள் பல்சர் NS200 மாடலை போலவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்ட அனைத்து தகவல்களும் இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் அடிப்படையில் கூறப்பட்டது. எனவே, இவை இன்னும் உறுதியாகவில்லை என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், பல்சர் விரும்பிகள் எதற்கும் தயாராக இருங்கள்...
மேலும் படிக்க | 180cc மாடலில் ஸ்டைலான பைக் வேண்டுமா... டிவிஎஸ் vs ஹோண்டா - எதை வாங்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ