ஃபோர்டு: கார்களின் விலையை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைத்தது

Last Updated : Aug 15, 2016, 03:34 PM IST
ஃபோர்டு: கார்களின் விலையை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைத்தது  title=

இந்திய சந்தையில் ஹூண்டாய் மற்றும் மாருதி விலையை உயர்த்தி வரும் நிலையில் ஃபோர்டு நிறுவனம் அடிரடியாக தனது முக்கிய கார்களின் விலையை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைத்துள்ளது.

தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட ஃபோர்டு ஆஸ்பியர் காரின் விலை ரூ.5.28 லட்சத்தில் இருந்து ரூ.7.89 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறது.

காரின் எளிமையான அம்சங்களைப் பொருத்து ஃபோர்டு ஆஸ்பியர் கார் விலை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் கொண்ட ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.4.54 லட்சத்தில் இருந்து ரூ.6.29 லட்சம் வரை விற்று வருகிறது.

Trending News