ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா... இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!

Air Conditioner Maintenance Tips: உங்கள் அறைக்கு ஏசி நல்ல குளிர்ச்சியை தர வேண்டும் என்றால் இந்த 5 எளிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 6, 2024, 03:13 PM IST
  • ஏசி குறித்த பல தவறான புரிதல்கள் இருக்கின்றன.
  • ஏசியை சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும்.
  • வெயில் வராத பகுதியில் ஏசியை வைப்பது நல்லது.
ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா... இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா! title=

Air Conditioner Maintenance Tips: கோடை காலம் முடிந்துவிட்டாலும் கூட இன்னும் பகல் பொழுதுகளில் வெயிலின் தாக்கம் சற்று கடுமையானதாகவே உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டாலும் இது தமிழ்நாட்டில் குறைந்த அளவிலான மழையே பெய்யும். எனவே, அடுத்த சில மாதங்களுக்கு கோடை காலம் போல் இல்லாவிட்டாலும், வெக்கையும், சூடும் தெரியும். 

எனவே, மக்கள் அனைவரும் இரவில் தூங்குவதற்கு ஏசியை நம்பி இருப்பார்கள் எனலாம். பகல் பொழுதுகளிலும் ஏசி நிச்சயம் தேவைப்படும். அப்படியானால் சூழலில் ஏசியில் இருந்து போதுமான அளவு குளிர்ச்சி கிடைக்கவில்லை என்றால் மிகவும் அசௌகரியாகமாக உணர்வீர்கள். ஏசி சரியான அளவில் அறைக்கு குளிர்ச்சியை வழங்கவில்லை என்ற சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அந்த வகையில், ஏசி சரியான அளவிற்கு குளிர்ச்சியை இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றவும். இதன்மூலம், பகலிலும் சரி, இரவிலும் சரி மக்களின் சௌரியத்திற்கு ஏற்ப அறையில் குளிர்ச்சி கிடைக்கும். இதனால் மக்கள் வியர்வை தொல்லை, வெக்கையின்றி நிம்மதியாக இரவில் தூங்குவார்கள். அவர்களின் அன்றாடமும் இயல்பானதாக மாறும். நல்ல குளிர்ச்சி வேண்டும் என்றால் புதிய ஏசிதான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, பழைய ஏசியில் நீங்கள் இந்த சில விஷயங்களை செய்தாலும் குளிர்ச்சி அதிகமாகும்.

மேலும் படிக்க | எக்கச்சக்க ஆப்பர்களில் கிடைக்கும் OnePlus மொபைல்கள்... எங்கு, எப்போது வாங்கலாம்?

5 முக்கிய வழிமுறைகள்

1. உங்கள் அறையில் ஏசியின் குளிர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் அறையை பூட்டி வைத்துவிட்டு ஏசியை 24 டிகிரியில் வைத்துவிட்டு, முழு வேகத்தில் இல்லாமல் மிதமான வேகத்திலோ அல்லது மிகவும் மெதுவாகவோ ஃபேனை இயக்கும்பட்சத்தில் அறையில் குளிர்ச்சி நீடிக்கும். மேலும், வேகமாகவும் அறை குளிர்ச்சி அடையும். 

2. உங்கள் ஏசி விரைவாக இயங்க வேண்டும் என்றாலோ அல்ல அதிக காலம் நீடிக்க வேண்டும் என்றாலோ நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். நீங்கள் அறையில் மாட்டியிருக்கும் ஏசியின் முன்பகுதி சூரிய ஒளி வரும் திசையில் வைக்காதீர்கள். சூரிய ஒளியில் இருந்து தள்ளிவைப்பது ஏசியை நீண்ட காலத்திற்கு நீண்ட காலம் செயல்பட வைக்கும். 

3. மேலும், ஏசி அதிக குளிர்ச்சியை தர வேண்டும் என்றால் அதை குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதாவது அப்படி வைத்தால் அறையில் வேகமாகவும், முழுமையாகவும் குளிர்ச்சி உண்டாகும் என நினைக்கின்றனர். ஆனால் அது தவறானது. Bureau Of Energy Effiency (BEE) இதுகுறித்து கூறுகையில், நீங்கள் உங்கள் ஏசியை 24 டிகிரி வைத்துக்கொண்டால் மட்டுமே சிறந்த அளவில் கூலிங் கிடைக்கும் என்கிறது. 

4. எப்போதும் ஏசியை அதிக நேரம் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால் உங்களின் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும். எனவே, உங்களுக்கு அதிக குளிர்ச்சியும் தேவை அதே நேரத்தில் குறைவாகவே மின்சார கட்டணமும் வர வேம்டும் என்றால், உங்கள் ஏசியின் ஃபில்டரை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும். இது உங்களின் மின்சார கட்டணத்தை கட்டுப்படுத்த உதவும். 

5. நீங்கள் புதிய ஏசியை வாங்கும்போது, அதை பல ஆண்டுகளுக்கு சர்வீஸ் செய்ய வேண்டாம் என்பதே உங்களுக்கு அதிகம் சொல்லப்பட்டிருக்கும். அது தவறானதாகும். நீங்கள் தகுந்த நேரத்தில் ஏசியை சர்வீஸ் செய்தாக வேண்டும். அதுவே உங்களின் ஏசியை அதிக குளிர்ச்சியை தரும், நீண்ட காலத்திற்கு செயல்பட வைக்கும், மின்சார கட்டணமும் குறைவாக வரும்.    

மேலும் படிக்க | கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏர்டெல் கொடுக்கும் ஜாக்பாட்... என்னென்னு பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News