பிளிப்கார்ட் ஜனவரி 27 முதல் தனது தளத்தில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையைத் தொடங்கியது. இதில் ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்போன்கள், ஏசிகள், ஃப்ரிட்ஜ்கள், ஹீட்டர்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பதிவில் நாம் iFFALCON இன் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பார்க்கலாம். இந்த விற்பனையில், இந்த டிவி-யின் அசல் விலையான ரூ.70,990க்கு பதிலாக வெறும் ரூ.25,186-க்கு இந்த டிவி-ஐ வாங்க முடியும். இதை எப்படி செய்வது என காணலாம்.
iFFALCON 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள்
ரூ.70,990 விலை கொண்ட iFFALCON 139cm (55 inch) Ultra HD (4K) LED Smart Android TV பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் 46% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.37,999க்கு விற்கப்படுகிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க நீங்கள் பணம் செலுத்தினால், உங்களுக்கு 5% அதாவது ரூ.1,813கேஷ்பேக், கிடைக்கும். இதன் மூலம் இந்த டிவியின் விலை ரூ.36,186 ஆக குறையும்.
ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.99க்கு Realme ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு
25 ஆயிரம் ரூபாய்க்கு இந்த டிவி-ஐ வாங்குவது எப்படி?
iFFALCON 139cm (55 inch) Ultra HD (4K) LED Smart Android TVயில் கிடியக்கும் இந்த டீலில், பிளிப்கார்ட் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. உங்கள் பழைய டிவிக்கு பதிலாக iFFALCON-ன் இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.25,186-க்கு வாங்க முடியும்.
ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்
iFFALCON 139cm (55 inch) Ultra HD (4K) LED Smart Android TV ஆண்ட்ராய்டில் வேலை செய்கிறது. இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியானது (Smart TV) 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் அல்ட்ரா எச்டி (4கே) டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் நீங்கள் 60Hz புதுப்பிப்பு வீதத்தையும் 24W ஒலி வெளியீட்டையும் பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட் டிவி Netflix, Amazon Prime Video மற்றும் YouTube போன்ற பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது.
பிளிப்கார்டின் இந்த எலக்ட்ரானிக்ஸ் விற்பனை ஜனவரி 31 ஆம் தேதி வரை லைவாக இருக்கும். அதாவது இதுபோன்ற கவர்ச்சிகரமான சலுகைகளைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.
ALSO READ | வெறும் ரூ. 2,560 கட்டி iPhone 13-ஐ வாங்கலாம்: அசத்தும் Flipkart Electronics Sale
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR