Flipkart Offer: ரூ.26 ஆயிரத்துக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள டிவி

பிளிப்கார்ட் ஆஃபரில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி வெறும் 26 ஆயிரம் ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 26, 2022, 09:00 AM IST
  • பிளிப்கார்டில் ஸ்மார்ட் டிவிகளுக்கு ஆஃபர்
  • பெரும் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது
  • சந்தர்பத்தை மிஸ் செய்துவிடாதீர்கள்
Flipkart Offer: ரூ.26 ஆயிரத்துக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள டிவி title=

Flipkart Electronics Sale 2022 Smart TV: உங்கள் வீட்டில் ஸ்மார்ட் டிவி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? . அப்படியானால், உங்கள் வீட்டிற்கு அற்புதமான டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் டிவியை வாங்குவதற்கான சரியான சந்தர்பம் இது. Flipkart Electronics விற்பனை கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் அனைத்து பிராண்டுகளின் வெவ்வேறு அளவுகளில் ஸ்மார்ட் டிவிகள் உட்பட பல மின்னணு பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் Vu பிரீமியம் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆஃபரை நாம் தெரிந்து கொள்வோம். ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனையாகும் இந்த ஸ்மார்டிவியை வெறும் ரூ.26 ஆயிரத்திற்கும் குறைவாக வாங்க முடியும். எப்படி? என்று தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ரூ.10 ஆயிரம் தள்ளுபடியில் சாம்சங்க் 5ஜி ஸ்மார்ட்போன்

55 இன்ச் ஸ்மார்ட் டிவி

55 இன்ச் ஸ்மார்ட் டிவி Vu பிரீமியம் 139cm (55 இன்ச்) அல்ட்ரா HD (4K) LED கொண்ட ஸ்மார்ட் டிவி ஆகும். இந்த டிவி 75 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவிக்கு ஃப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையின் கீழ் 49% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 75 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி ஆஃரில் ரூ.37,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர இஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளும் உள்ளன. 

ரூ.26 ஆயிரத்துக்கு வாங்குவது எப்படி? 

இந்த ஸ்மார்ட் டிவியை வாங்குவதற்கு எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். இது மட்டுமின்றி, பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறுவதன் மூலம் மேலும் 11 ஆயிரத்தை சேமிக்க முடியும், இதன் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை உங்களுக்கு ரூ.25,749 ஆக இருக்கும்.

ஸ்மார்ட் டிவியின் அருமையான அம்சங்கள்

Vu பிரீமியத்தின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒரு அல்ட்ரா HD 4K LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆகும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவியில், 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி டிஸ்ப்ளே மற்றும் 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவி 30W ஒலி வெளியீடு மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட் டிவி நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த டிவியில், பில்ட்-இன் வைஃபை, எஸ்-மாஸ்டர் டிஜிட்டல் ஆம்ப்ளிஃபையர், இணைப்பிற்கான பல போர்ட்கள், ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஸ்மார்ட் ரிமோட் போன்ற பல அம்சங்களும் உள்ளன. 

மேலும் படிக்க | Nokia 4G Smartphone: நோக்கியாவின் 4ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ 549

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News