Flipkart Sale: வெறும் ரூ. 599-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung ஸ்மார்ட்போன்

தற்போது பிளிப்கார்டில் தீபாவளி விற்பனை முடிந்துவிட்டது. ஆனால் பிளிப்கார்ட் இன்னும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2021, 12:15 PM IST
  • Flipkart இன் கோலாகல தீபாவளி விற்பனை முடிந்து விட்டது.
  • எனினும், பிளிப்கார்டில் இன்னும் சலுகைகளும் தள்ளுபடிகளும் தொடர்கின்றன.
  • பிளிப்கார்டில் லேட்டஸ்ட் தொலைபேசியை வாடிக்கையாளர்கள் மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும்.
Flipkart Sale: வெறும் ரூ. 599-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung ஸ்மார்ட்போன் title=

Flipkart Top Offers: Flipkart இன் கோலாகல தீபாவளி விற்பனை முடிந்து விட்டது. விற்பனையில் ஸ்மார்ட்போன்களில் அற்புதமான தள்ளுபடிகள் கிடைத்தன. ஐபோன் 12 முதல் பல விலையுயர்ந்த போன்கள் வரை அனைத்து வகை போன்களையும் வாடிக்கையாளர்கள் மிக மலிவான விலையில் வாங்கினர்.

தற்போது தீபாவளி விற்பனை முடிந்துவிட்டது, ஆனால் பிளிப்கார்ட் (Flipkart) இன்னும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது. பிளிப்கார்டில் சாம்சங் ஸ்மார்ட்போன்களை மிக மலிவான விலையில் வாங்கலாம். SAMSUNG Galaxy F12 ஐ வெறும் 599 ரூபாய்க்கு வாங்க முடியும் என்று சொன்னால் பலரால் நம்ப முடியாது. ஆனால், இது உண்மை!! இந்த போனில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Samsung Galaxy F12: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

SAMSUNG Galaxy F12 4GB RAM + 64GB வகையின் அறிமுக விலை ரூ.12,999 ஆகும். பிளிப்கார்டில் 12% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனை பிளிப்கார்ட்டில் ரூ.11,499-க்கு வாங்கலாம். எனினும் இதில் கிடைக்கும் சலுகைகள் மூலம், இந்த தொலைபேசியை வாடிக்கையாளர்கள் மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும். இதை எப்படி வாங்குவது என இங்கே காணலாம்.

SAMSUNG Galaxy F12 இல் பரிமாற்றச் சலுகைகள்

SAMSUNG Galaxy F12 இல் ரூ.10,900 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக்கொள்ள விரும்பினால், வெறும் 599 ரூபாய்க்கு போனை வாங்க முடியும். எனினும், இந்த பரிமாற்ற சலுகையைப் பெற, போனின் நிலை நன்றாக இருக்க வேண்டும், மற்றும் போனின் மாடல் லேட்டஸ்ட் மாடலாக இருக்க வேண்டும்.

ALSO READ:வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு Realme 5G ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு 

Samsung Galaxy F12 இல் வங்கி சலுகைகள்

வாடிக்கையாளர்கள் பழைய போனை மாற்ற விரும்பவில்லை என்றால், இந்த போனில் வங்கி சலுகையும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 5% தள்ளுபடி கிடைக்கும், அதாவது, போனில் ரூ.399 தள்ளுபடி கிடைக்கும்.

Samsung Galaxy F12 இன் விவரக்குறிப்புகள்

Samsung Galaxy F12 ஆனது 6.51-inch HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டுக்கான ஸ்லாட்டும் உள்ளது. இதன் மூலம், 512ஜிபி வரை மெமரியை விரிவாக்க முடியும்.

SAMSUNG Galaxy F12 ஆனது 48MP + 5MP + 2MP + 2MP கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 8எம்பி சென்சார் உள்ளது. தொலைபேசியில் 6000mAH வலுவான பேட்டரியும் உள்ளது.

ALSO READ:Samsung இன் 32-இன்ச் Smart TV இல் மிகப்பெரிய தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News