Flipkart Big Saving Days 2023: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. புத்தாண்டு துவங்கியுள்ள நிலையில், தற்போதும் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவு பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றது. பிளிப்கார்ட் சில ஸ்மார்ட்போன்களில் அளிக்கும் பெரிய சலுகைகள் பயனர்களும் யூகிக்கக் கூட முடியாத அளவிற்கு அதிரடியாக உள்ளன.
நீங்களும் ஸ்மார்ட்போன் வாங்க எண்ணி, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றி இதில் காணலாம். இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சலுகை விவரங்களை இந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
மோட்டோரோலா ஜி32
மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியை பெறலாம். பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ரூ.16,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.
பிளிப்கார்ட் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனில் 41% தள்ளுபடியை வழங்குகிறது. அதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனின் விலை 9999 ரூபாயாக குறைகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் தள்ளுபடிகள் இதோடு முடிந்துவிடவில்லை. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக நன்கைகள் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 599-க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஏனெனில் இந்த சலுகையில் ரூ. 9400 மதிப்பிலான மிகப்பெரிய எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற சலுகை வழங்கப்படுகின்றது. இது முழுமையாக செயல்படுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் இந்த சிறிய தொகையை செலுத்தி இந்த அட்டகாசமான போனை வாங்க முடியும்.
ரெட்மி 10
இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை 14,000 ரூபாய் ஆகும். எனினும், வாடிக்கையாளர்கள் இந்த போனை மிக மலிவான விலையில் வாங்க முடியும். பிளிப்கார்ட் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனில் 33% தள்ளுபடியை வழங்குகிறது. அதன் பிறகு நீங்கள் வெறும் ரூ. 9999-க்கு இந்த போனை வனக்க முடியும்.
ஆனால், தள்ளுபடிகள் இதோடு முடிவடையவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் மேலும், ரூ. 9,400-க்கான தள்ளுபடி அளிக்கப்படுகின்றது. இதையும் பயன்படுத்திக்கொண்டால் ரெட்மியின் இந்த அசத்தலான போனை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 599-க்கு வாங்க முடியும்.
மேலும் படிக்க | வாட்ஸ்அப் சாட் கொண்டு வரும் புதிய அம்சம்! தொந்தரவு நபர்களை இப்படி பிளாக் செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ