EPFO Balance Check: EPFO தனது வாடிக்கையாளர்களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) இல்லாமல் PF இருப்பை சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது. பல சமயங்களில், சில தேவைகளின் காரணமாக திடீரென PF இருப்பை சரிபார்க்க வேண்டியிருக்கும் போது, அந்த நேரத்தில் உங்களுக்கு UAN எண் நினைவில் இல்லாமல் போகலாம். அப்போது இந்த முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலான பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த ட்ரிக் பற்றி தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், யுனிவர்ஸ் கணக்கு எண் இல்லாமலேயே உங்களது பிஎஃப் இருப்பை ஒரு நிமிடத்திற்குள் தெரிந்துகொள்ளும் இந்த எளிய முறையை இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
மேலும் படிக்க | 125 ரூபாயில் நச் திட்டம்... இனி தினமும் உங்களுக்கு டேட்டா காலியாகாது - முழு விவரம்!
எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் பிஎஃப் கணக்கு இருப்பை அறிந்து கொள்ளலாம்
வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை சரிபார்க்க விரும்பினால் 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளை பின்பற்ற வேண்டும்:
1. முதலில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
2. செய்தியில், "EPFOHO UAN" என டைப் செய்யவும்.
3. UAN எண்ணுக்குப் பிறகு, உங்களுக்கு விருப்பமான மொழிக்கான மொழிக் குறியீட்டைத் டைப் செய்யவும்.
4. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற விரும்பினால், "EPFOHO UAN ENG" என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
5. செய்தியை அனுப்பிய பிறகு, உங்கள் PF இருப்பைக் கொண்ட SMS ஒன்றைப் பெறுவீர்கள். ஒரே நிபந்தனை என்னவென்றால், உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பிஎஃப் கணக்கில் பதிவு செய்திருக்க வேண்டும்.
PF இலிருந்து பணத்தை எடுக்க, சில நிபந்தனைகள்
PF அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க பணியாளரின் வயது 58 ஆக இருக்க வேண்டும். ஊழியர் குறைந்தபட்சம் 5 வருடங்கள் PFக்கு பங்களித்திருக்க வேண்டும். PF இலிருந்து திரும்பப் பெற, பணியாளர் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
PF இன் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்
இது ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. PF-ல் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டியும் கிடைக்கும், இது பணியாளரின் ஓய்வுக்குப் பிறகு பலன்களை அதிகரிக்கிறது. PF இலிருந்து திரும்பப் பெறுவதற்கு, ஊழியர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். PF என்பது ஒரு முக்கியமான சேமிப்புத் திட்டமாகும்.
மேலும் படிக்க | ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட திருட்டு மொபைல் போனை மீட்பது எப்படி? ஒரே ஒரு செட்டிங்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ