போட்டோ ஷூட்டினால் ஏற்பட்ட விபரீதம்! தேனிலவுக்கு சென்ற சென்னை காதல் ஜோடி மரணம்!

இந்தோனேசிய தீவிற்கு இன்ப சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண காதல் தம்பதி படகு விபத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 10, 2023, 07:43 AM IST
  • தேனிலவுக்கு சென்ற சென்னை புதுமண தம்பதி பலி.
  • லோகேஸ்வரன் - விபூஷ்ணியா நீரில் மூழ்கி உயிரிழப்பு.
  • போட்டோ ஷூட் நடத்தியபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்.
போட்டோ ஷூட்டினால் ஏற்பட்ட விபரீதம்! தேனிலவுக்கு சென்ற சென்னை காதல் ஜோடி மரணம்!  title=

தற்போது திருமணத்திற்கு முன்பும், பின்பும் போட்டோ ஷூட் பிரபலமாகி வருகிறது. வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் செய்ய தம்பதிகள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.  போட்டோ ஷூட் செய்யும் போது ஏற்படும் விபத்துகளும் அதிகரித்தும் வருகிறது, சில வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆகும். அந்த வகையில், சென்னை பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வம், மல்லிகா தம்பதியரின் மகள் விபூஷ்னியா பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம், குணச்சுந்தரி ஆகியோரின் மகன் மருத்துவரான லோகேஷ்வரனுக்கும் கடந்த 1 ஆம் தேதி பூவிருந்தவல்லியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரிரு நாளில் இருவரும் இன்ப சுற்றுலாவிற்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர். 

marr

மேலும் படிக்க | மின் கட்டணம் உயர்வு, ஆனால்... மின்சார வாரியம் விளக்கம்!

தீவில் விரைவு மோட்டர் படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது படகு விபத்து ஏற்பட்டு இருவரும் தண்ணீரில் மூழ்கினர். பின்னர் காவல்துறையினர் உதவியுடன் லோகேஷ்வரன் உடல் உயிர் இழந்த நிலையில் கண்டெடுத்த நிலையில் விபூஷ்னியா உடல் அடுத்த நாள் எடுக்கப்பட்டது. இன்பச் சுற்றுலா சென்ற காதல் தம்பதி உயிர் இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, போட்டோ ஷூட் நடத்தியபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரின் உடலை அங்கிருந்து சென்னை கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் திருக்கோவிலூர் அருகே விசித்திரமாக செய்தி பத்திரிக்கையில் திருமணம் பேனர் வைத்ததை பொதுமக்கள் ரசித்து சென்றனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேட்டுச்சேரி கிராமத்தில் சேர்ந்த மணமக்களான- ஐயப்பன் (எ) கிரி- சாதனா (எ) நிஷா, இவர்களுக்கு நண்பர்கள் ஒன்று இணைந்து திருமணம் பேனரை வைத்துள்ளார் பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாக திருமணம் பேனர் வைத்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.  

invite

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு மாஸ் அறிவிப்பு.. புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News