Cheapest Electric Scooters: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு நீங்கள் தீர்வு காண விரும்பினால், மின்சார வாகனங்கள் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும்.
பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது மின்சார ஸ்கூட்டர்களின் (Electric Scooters) இயங்கும் செலவு (running cost) மிகவும் குறைவாகும். மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால், வாகன ஓட்டிகள், பெட்ரோலுக்குச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
ஆனால், பொதுவாக மின்சார ஸ்கூட்டர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், மக்கள் அவற்றை வாங்க தயங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சந்தையில் உள்ள மலிவான, ஆனால், திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்திருப்பது மிக முக்கியமாகும். அந்த வகையில், 50000 ரூபாய்க்கு குறைவான விலையில், நீங்கள் வாங்கக் கூடிய சில சிறந்த மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் (Hero Electric Flash): Hero Electric Flash-ன் ஆரம்ப விலை ரூ.46640 ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.59640 ஆக உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரில் 250W மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
ஹீரோ எலக்ட்ரிக் டேஷ் (Hero Electric Dash): ஹீரோ எலக்ட்ரிக் டேஷின் ஆரம்ப விலை 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.62,000 ஆக உள்ளது. இந்த மின்சார வாகனம் மூன்று வகைகளில் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 60 கிமீ தூரம் பயணிக்கும். இதில் 250V மோட்டார் உள்ளது. இது லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆம்பியர் மேக்னஸ் (Ampere Magnus): ஆம்பியர் மேக்னஸின் ஆரம்ப விலை ரூ.49,999 ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.76,800 வரை செல்கிறது. இது 84 கிமீ சவாரி வரம்பை (Riding Range) வழங்குகிறது. இந்த மின்சார ஸ்கூட்டரின் எடை 82 கிலோ ஆகும். இதில் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் 50 கி.மீ ஆகும்.
அவான் இ ஸ்கூட் (Avon E Scoot): Avon E ஸ்கூட்டரின் ஆரம்ப விலை சுமார் 45 ஆயிரம் ரூபாயாகும். இது 65 கிமீ சவாரி வரம்பை வழங்குகிறது. இது 215w மோட்டார் மற்றும் VRLA வகை பேட்டரியைக் கொண்டுள்ளது.
பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1 (Bounce Infinity E1): மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார ஸ்கூட்டர் இதுவாகும். பவுன்ஸ் இன்ஃபினிட்டிய்யின் (Bounce Infinity) இதன் ஆரம்ப விலையும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இதன் ரைடிங் ரெஞ் 85 கிமீ ஆகும். இதில் 1500W மோட்டார் உள்ளது. Bounce Infinity E1 இன் அதிகபட்ச வேகம் 65kmph ஆகும்.
ALSO READ | மின்சார வாகன சந்தையை கலக்க வரும் 3 அட்டகாச மின்சார இரு சக்கர வாகனங்கள்!! விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR