Nokia அதிரடி: தனது மிக மலிவான 5G ஃபோனை அறிமுகம் செய்யவுள்ளது, கசிந்த விவரங்கள் இதோ

தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சியை, ஸ்மார்ட்போன் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்கள் செயல்முறையில் பல மாற்றங்களை செய்து வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 03:44 PM IST
Nokia அதிரடி: தனது மிக மலிவான 5G ஃபோனை அறிமுகம் செய்யவுள்ளது, கசிந்த விவரங்கள் இதோ  title=

Nokia G50: தொழில்நுட்ப ரீதியாக நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். சாதாரண குரல் அழைப்பிலிருந்து இணையத்திற்கு மாறினோம். பின்னர் 2 ஜி, 3 ஜி, 4 ஜி மற்றும் இப்போது 5 ஜி என முன்னேறி வருகிறோம். தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சியை, ஸ்மார்ட்போன் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்கள் செயல்முறையில் பல மாற்றங்களை செய்து வருகின்றன.

அந்த நிறுவனங்களில் நோக்கியாவும் (Nokia) ஒன்று. உலகின் பழமையான தொலைபேசி தயாரிப்பாளர்களில் ஒருவரான நோக்கியாவும் காலத்திற்கேற்ப தனது தயாரிப்புகளை மாற்றவும் மாற்றியமைக்கவும் முயற்சித்து வருகிறது. இப்போது 5 ஜி யுகத்தில், நோக்கியா தனது மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வரக்கூடும் என கூறப்படுகின்றது. இது குறித்து கசிந்த தகவல்களில் Nokia G50 பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Nokia G50 பற்றிய குறிப்பு

நோக்கியாவின் இந்த 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு (Smartphone) TENAA சான்றிதழ் கிடைத்து விட்டது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் GeekBench போர்ட்டலில் காணப்பட்டது. நோக்கியா ஜி 50 இன் சில அம்சங்கள் பற்றியும் இந்தப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.

ALSO READ: JioPhone Next உடன் டக்கர், விரைவில் Realme புதிய Smartphone அறிமுகம்

கேமரா மற்றும் பிராசசர்

இந்த போனின் முதன்மை லென்ஸ் 48MP ஆகவும் முன் கேமரா 8MP ஆகவும் இருக்கக்கூடும். ஜீக்பெஞ்சின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC மூலம் இயக்க முடியும். இது 5 ஜி சிப்செட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நோக்கியாவின் மிக மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

1.80GHz என்ற பேஸ் ஃப்ரீக்வென்சியுடன், இந்த போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வரக்கூடும். செய்திகளின் படி, வாடிக்கையாளர்கள் இதில் மைக்ரோ எஸ்டி கார்டின் வசதியை பெறமாட்டார்கள். இந்த போன் (Mobile Phone) TENAA வில் 2GB, 4GB, 6GB மற்றும் 8GB என 4 வகைகளில் காணப்பட்டது. இதில் 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என நான்கு ஸ்டோரேஜ் வகைகள் இருக்கும்.

நோக்கியா ஜி 50: விலை

6.82 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைனில் காணப்பட்டபோது, ​​அதன் விலை 288 டாலர் (ரூ. 21,022) என்று எழுதப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் இது ஃபாரஸ்ட் பிளாக் வண்ணத்தில் வெளிவரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த போன் எந்த வண்ணங்களில், எந்தெந்த வகைகளில், எப்போது வெளிவரும் என்பது பற்றி இன்னும் சரியான தகவல்கள் வெளிவரவில்லை.

ALSO READ: Redmi புதிய Smartphone அறிமுகம், குறைந்த விலையில் பல அம்சங்களை பெறுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News