Smartphones: ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான போன்கள் இதோ

அசத்தலான பல அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. நீங்களும் குறைந்த விலையில் நல்ல தொலைபேசியை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 13, 2021, 03:03 PM IST
  • அசத்தலான பல அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.
  • Samsung Galaxy F12 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
  • Tecno Spark 7 Pro-வில் 8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா மற்றும் AI லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
Smartphones: ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான போன்கள் இதோ title=

Cheap Smartphones: ஸ்மார்ட்போன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் என்பது ஒரு நல்ல பட்ஜெட்டாக பார்க்கப்படுகின்றது. இந்த விலையில் பெரும்லாலும் அனைவராலும் தொலைபேசியை வாங்க முடியும். தற்போது, ​அசத்தலான பல அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. 

நீங்களும் குறைந்த விலையில் நல்ல தொலைபேசியை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். கீழ்கொடுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் உங்கள் வசதிக்கு ஏற்ப நல்ல போனை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கலாம். அவற்றின் விவரக்குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். 

Realme C25s
Realme C25s ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது, இது 720x1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. இந்த தொலைபேசியில் செயல்திறனுக்காக மீடியா டெக் ஹீலியோ ஜி 85 செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மே யுஐ 2.0 இல் வேலை செய்யும். இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. Realme C25s-ல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது லென்சில் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் மூன்றாவதில் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன. செல்பிக்காக 8 மெகாபிக்சல் கேமரா தொலைபேசியில் வழங்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .9,999 ஆகும்.

Tecno Spark 7 Pro
Tecno Spark 7 Pro 720x1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.6 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட தொலைபேசி HiOS 7.5 இல் இயங்குகிறது. தொலைபேசியில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோவில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதன் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா மற்றும் AI லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 8 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ .9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Nokia C20 Plus: வெறும் ரூ.8000-ல் அறிமுகம் ஆனது அட்டகாச ஸ்மார்ட்போன்

Infinix Hot 10S
Infinix Hot 10S ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளே உள்ளது. இது 1640 × 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. தொலைபேசியில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 செயலி பொருத்தப்பட்டுள்ளது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 7.6 இயக்க முறைமையில் இயங்குகிறது. Infinix Hot 10S-ல் புகைப்படம் எடுப்பதற்கான மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதன் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்கள், செகண்டரி 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் மூன்றாவது AI அடிப்படையிலான லென்ஸ் ஆக கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ .9,999 ஆகும்.

Samsung Galaxy F12 
Samsung Galaxy F12 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையில் இயங்குகிறது. இந்த தொலைபேசியில் எக்ஸினோஸ் 850 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் விரிவாக்கலாம். இதில் 48 மெகாபிக்சல் கேமரா உள்ளது. தொலைபேசியின் விலை பத்தாயிரம் ரூபாயை விட சற்று அதிகம். ஆனால் இந்த பட்ஜெட்டில் இது ஒரு மிகச்சிறந்த தொலைபேசியாக  இருக்கும்.

Poco C3
Poco C3 ஸ்மார்ட்போன் (Smartphone) ஒரு சிறந்த தொலைபேசியாகும். இதில் நீங்கள் 6.53 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த தொலைபேசி Android 10 OS ஐ அடிப்படையாகக் கொண்டது. புகைப்படம் எடுப்பதற்காக, அதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 13MP பிரைமரி சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளன. வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி எடுக்க 5 எம்.பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மெடிடெக் ஹீலியோ ஜி 35 செயலியில் வேலை செய்கிறது. இது 5000 எம்ஏஎச் வலுவான பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான விஷயம் இதன் விலையாகும். இந்த தொலைபேசியின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டை வெறும் ரூ .7,999 க்கு வாங்க முடியும்.

ALSO READ: Poco M3 Pro 5G: அட்டகாச அம்சங்கள், நம்ப முடியாத விலை, இந்தியாவில் Poco-வின் புதிய போன் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News