Best Electric Bike: சந்தையை கலக்கும் சூப்பரான மின்சார பைக், முழு விவரம் இதோ

மின்சார பைக்குகளின் மார்க்கெட்டைப் பற்றி பேசினால், ஒரு பைக் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 11:54 AM IST
  • மின்சார பைக்குகளின் மார்க்கெட்டைப் பற்றி பேசினால், ஒரு பைக் பலரை திரும்ப பார்க்க வைத்துள்ளது.
  • இந்த பைக்கின் அம்சங்கள் காரணமாக இது மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது.
  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனம் சுமார் 502 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது- நிறுவனம்.
Best Electric Bike: சந்தையை கலக்கும் சூப்பரான மின்சார பைக், முழு விவரம் இதோ title=

Best Electric Bike : மின்சார கார்களுடன், மின்சார இரு சக்கர வாகனங்களும் மின்சார வாகன சந்தையில் பிரபலமடைந்து வருகின்றன. ஸ்கூட்டர் மட்டுமின்றி தற்போது பல மின்சார பைக்குகளும் சந்தைக்கு வருகின்றன.

மின்சார பைக்குகளின் (Electric Bikes) மார்க்கெட்டைப் பற்றி பேசினால், ஒரு பைக் பலரை திரும்ப பார்க்க வைத்துள்ளது. இந்த பைக்கின் அம்சங்கள் காரணமாக இது மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சிறப்பு பைக் கேளிக்கைக்கான பைக்காக பார்க்கப்படுகின்றது.

இந்த அற்புதமான பைக் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பைக்கை உற்பத்தி செய்யும் Wardwizard Innovations & Mobility Limited நிறுவனம், அக்டோபர் 2021 இல், ஆண்டு அடிப்படையில் விற்பனையில் 502% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறது. இந்த பைக்கில் உள்ள சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

நிறுவனம் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது

Wardwizard Innovations & Mobility Limited, அதன் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பைக்குகளை ’ஜாய் இ-பைக்’ பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்கிறது. நிறுவனம் சமீபத்தில் இரண்டாவது காலாண்டின் முடிவுகளை அறிவித்தது. அதில், 2021 அக்டோபரில் 2885 மின்சார பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 474 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ: Electric Bike: சந்தையில் அறிமுகம் ஆனது அட்டகாசமான Rugged e-Bike, வலிமையில் இல்லை நிகர்  

‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனம் சுமார் 502 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் எங்களது அனைத்து முன்பதிவு மையங்களிலும் ஏராளமான ஆர்டர்களைப் பெறுகிறோம்’ என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த பைக்கில் உள்ள சிறப்பம்சம் என்ன?

இந்த பைக்கின் (Bike) சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இதில் 250W மோட்டார் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. சார்ஜிங்கைப் பற்றி பேசினால், இந்த பைக் நான்கு முதல் நான்கரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ. ஆகும். அதன் பேட்டரி திறன் 72V 23AH ஆகும். இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 75 கிமீ வரை செல்லும். இந்த பைக்கின் விலை சுமார் 1,56,000 ரூபாய் ஆகும்.

இந்த பைக்குகளுடன் சந்தையில் போட்டியிடும்

மின்சார பைக் பிரிவில் இந்த வரம்பில் உள்ள மற்ற நிறுவனங்களின் பைக்குகளைப் பற்றி நாம் பேசினால், இந்த பைக் ஒடிஸி எலக்ட்ரிக் எவோகிஸுடன் போட்டியிடுகிறது. மறுபுறம், இந்த வரம்பில் உள்ள ஸ்கூட்டர்களை எடுத்துக்கொண்டால், இது சிம்பிள்-1 (Simple One) மற்றும் ஏதர் 450X ஆகியவற்றுக்கு நல்ல ஈடாக இருக்கும்.

ALSO READ: 10 பைசாவில் 1 கி.மீ பயணம்: அசத்தும் Autm 1.0 மின்சார வாகனம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News