விரைவில் ஆரம்பம் ஆகிறது Amazon Great Republic day sale 2022: எக்கச்சக்க சலுகைகள்

அமேசான் நிறுவனம், குடியரசு தின சிறப்பு விற்பனை 2022 மூலன் சிறு வணிகங்களை ஆதரிக்கும் வாய்ப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 09:05 AM IST
  • அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனை துவங்கிவிட்டது.
  • இதில் பல பொருட்களுக்கு அதிரடியான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • இந்த விற்பனை உள்ளூர் கடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.
விரைவில் ஆரம்பம் ஆகிறது Amazon Great Republic day sale 2022: எக்கச்சக்க சலுகைகள் title=

Amazon Great Republic Day Sale 2022: அமேசான் நிறுவனம், தனது குடியரசு தின சிறப்பு விற்பனை 2022 (Amazon Great Republic Day Sale 2022) மூலன் சிறு வணிகங்களை ஆதரிக்கும் வாய்ப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 

விற்பனை ஜனவரி 17, 2022 முதல் விற்பனை தொடங்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் amazon.in அல்லது Amazon செயலியில் லாக் இன் செய்து தள்ளுபடி விலையில் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிச்செல்லலாம். 

இந்திய MSMEகள் மூலம் பெரிய அளவில் சேமிக்கவும்

இந்த மாபெரும் குடியரசு தின விற்பனையில், வாடிக்கையாளர்கள், இந்தியா முழுவதும் உள்ள 450 நகரங்களில் இருந்து 1 லட்சம் உள்ளூர் கடைகள் உட்பட சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள், இந்திய நேரடி நுகர்வோர் தொடக்க நிறுவனங்கள், அருகிலுள்ள கடைகள் மற்றும்  பெண் தொழில்முனைவோர் என பரந்த தேர்வுகளை அணுகலாம். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக பொருட்களையும் தேர்வு செய்ய முடியும். 

அமேசான் லாஞ்ச்பேட், அமேசான் சஹேலி, அமேசான் காரிகர் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் அமேசான் விற்பனையாளர்களின் தயாரிப்புகளையும், ஃபேஷன் மற்றும் அழகுக்கான அத்தியாவசியப் பொருட்கள், அணிகலன்கள், ஸ்மார்ட் வியரபில்ஸ் போன்ற வகைகளில் சிறந்த இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளின் தயாரிப்புகளையும் இந்த சிறப்பு குடியரசு தின விற்பனையில் காண்பிக்கும். அலுவலக பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரிகள், வீடு, சமையலறை மற்றும் விளையாட்டு பொருட்கள், தளபாடங்கள், மளிகை பொருட்கள், பொம்மைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் ஆகியவையும் இதில் இருக்கும். 

ALSO READ  | Amazon கிரேட் இண்டியா சேல் ஒரு நாள் முன்னதாகவே தொடங்கும் காரணம் இதுதான்! 

MSMEகள் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் சேமிக்கக்கூடிய சலுகைகள் பின்வருமாறு:

1) Amazon Renewed - புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய தயாரிப்புகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி

Samsung, OnePlus, HP, Lenovo போன்ற சிறந்த பிராண்டுகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி. புதுப்பிக்கப்பட்ட & புதிய தயாரிப்புகளுக்கு கிடைக்கும். 

2) அமேசான் சஹேலி - சத்புருஷிலிருந்து குளியலறை உபயோகப் பொருட்கலை வாங்கினால் 65 சதவீதம் வரை தள்ளுபடி

டெர்ராவிடாவிலிருந்து வாங்கும் ஹெல்த் சப்ளிமென்ட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி

Pepme இலிருந்து வாங்கும் வீடு மற்றும் அலங்காரப் பொருட்களுக்கு 15 சதவீதம் வரை தள்ளுபடி.

3) உள்ளூர் கடைகள் - DSS COTTINFAB இலிருந்து வாங்கும் ஆடைகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி

SG Enterprise Online வழங்கும் அழகு சாதனப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி

GOODHOMES வழங்கும் சர்வ்வேர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி

SpaceinCart வழங்கும் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி

சசிட்ரெண்ட்ஸ் வழங்கும் நகைகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி

பிரைம் உறுப்பினர் வசதி

பிரைம் உறுப்பினர்களுக்கான சிறப்பு சலுகையாக, அமேசான் 'கிரேட் ரிபப்ளிக் டே சேல்' பிரைம் உறுப்பினர்களுக்காக ஜனவரி 16, 2022 அன்று காலை 12 மணிக்கு லைவ் ஆகும் என்பதை ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.

உடனடி தள்ளுபடி

Great Republic Day Sale'-யின் போது ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் கூடுதல் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேமிப்பு கிடைக்கும். பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ கார்டு, அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, அமேசான் பே லேட்டர் மற்றும் சில குறிப்பிட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நோ-காஸ்ட் இஎம்ஐ-க்கான வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் ரூ. 16,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ | Amazon மற்றும் Flipkart -ல் அதிரடியாக தொடங்கும் Republic Day sale!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News