Flipkart Big Diwali Sale: இந்த விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு பம்பர் தள்ளுபடி

Flipkart தற்போது "Big Diwai Sale" நடத்துகிறது, இது பலவிதமான போன்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2021, 12:15 PM IST
Flipkart Big Diwali Sale: இந்த விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு பம்பர் தள்ளுபடி title=

டெக் டெஸ்க் Flipkart அதன் மேடையில் "Big Diwai Sale" நடத்துகிறது, இது பலவிதமான போன்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. வாருங்கள் கீழே உள்ள சிறந்த டீல்களைப் பார்க்கலாம். ஃபிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனையில் OnePlus, Realme, Vivo, Apple மற்றும் Samsung ஆகியவற்றில்தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம். 

இந்த ஸ்மார்ட்போன்களில் சலுகைகள் கிடைக்கும்
iPhone 12 Flipkart இல் 53,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. SBI வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.1,500 தள்ளுபடி சலுகையும் உள்ளது. இதன் மூலம் விலை ரூ.52,499 ஆக குறைந்துள்ளது. இ-காமர்ஸ் தளம் உங்கள் சாதனத்தை பரிமாற்றம் செய்வதில் ரூ.14,950 வரை தள்ளுபடி வழங்குகிறது, அதாவது ரூ.50,000க்கும் குறைவாக இந்த சாதனத்தை நீங்கள் வாங்க முடியும்.

ALSO READ: iPhone 12-ல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி: பிளிப்கார்ட் விற்பனையில் ஜாக்பாட்! 

Samsung Galaxy F12 ஆனது ரூ.8,549 விலையில் கிடைக்கிறது. தளத்தில் இது ரூ.9,499க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் ரூ.8,549க்கு இந்த ஃபோனைப் பெறலாம். Pixel 4a ஐ 25,999 ரூபாய்க்கு வாங்கலாம். ப்ரீபெய்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி சலுகையும் உள்ளது.

கேமிங் போனில் பெரும் தள்ளுபடி
பட்ஜெட் போனான Poco M3, ரூ.10,999க்கு விற்பனையில் கிடைக்கிறது. மேலும் உங்களிடம் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், ரூ.1,100 தள்ளுபடி பெறலாம். தள்ளுபடிக்குப் பிறகு, 9,899 ரூபாய்க்கு வாங்கலாம்.

பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனையின் போது, ​​நீங்கள் ரூ.25,999க்கு Realme GT Masterஐ வாங்கலாம். ப்ரீபெய்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி சலுகை உள்ளது. 

i-Phone பயனர்களுக்கு பெரும் தள்ளுபடி
Apple இன் iPhone SE ஐ ரூ.30,099க்கு வாங்கலாம். எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடி பெறலாம். அதே சலுகை Vivo X60 மற்றும் Realme 8i இல் கிடைக்கிறது. Vivo ஸ்மார்ட்போனை ரூ.33,490க்கும், Realme பட்ஜெட் சாதனத்தை ரூ.12,499க்கும் வாங்கலாம்.

ALSO READ:பிளிப்கார்ட் சேலில் படு டிமாண்டில் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News