Budget 2022: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நாட்டில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உலகம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைகள் (5G Services) தொடர்பான முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. பட்ஜெட்டின் படி, நாட்டில் 2022-23 ஆம் ஆண்டு முதல், அதாவது இந்த ஆண்டு முதல் 5G சேவைகள் தொடங்கும். 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
நாட்டில் 5ஜி சேவைகள்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), இந்த ஆண்டு முதல் நாட்டு மக்கள் 5ஜி சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளார். 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும். இதனால் நாட்டில் 5ஜி சேவைகள் விரைவில் கிடைக்கத் துவங்கும்.
ALSO READ | Highlights of Budget 2022: பட்ஜெட்டின் முக்கியமான 40 ஹைலைட் அம்சங்கள்
5ஜி அலைக்கற்றை ஏலம்
5ஜி மொபைல் சேவைகளை அறிமுகம் செய்வதற்காக 2022-23 நிதியாண்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். டெலிகாம் துறை மற்றும் 5G ஆகியவை வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.
பிராட்பேண்ட் நெட்வொர்க் அனைத்து கிராமங்களையும் சென்றடையும்
கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவைகளை வழங்குவதற்காக யுனிவர்சல் சர்வீஸ் ஒதுக்கீடு நிதியின் ஆண்டு சேகரிப்பில் 5% ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஆப்டிகல் ஃபைபர் வசதியை வழங்குவதற்கான ஒப்பந்தம் பாரத் நெட் திட்டத்தின் மூலம் முடிக்கப்பட்டு அதன் பணிகள் 2025க்குள் நிறைவடையும்.
ALSO READ | Budget 2022 Reaction: ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவுத் திட்டம்!? அவசியம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR