கோடைக்காலத்திற்கான பைக் டிப்ஸ்: நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பம் நிலவுகிறது. இந்த நிலையில், மதியம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். நீங்களும் தினமும் பைக் ஓட்டும் நபராக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில பைக் ரைடிங் டிப்ஸ்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
லேசான பருத்தி ஆடைகளை அணியவும்
கோடையில் பைக் ஓட்டும் போது, எப்போதும் இலகுவான மற்றும் பருத்தி ஆடைகளை அணியுங்கள். இதனால் உங்கள் வியர்வை உடனடியாக காய்ந்துவிடும். முழு கை ஆடைகளை அணிய முயற்சிக்கவும். இதனால் சூரியனின் வெப்பத்திலிருந்து உங்கள் கைகளை பாதுகாக்க முடியும்.
கியரை கவனமாக பயன்படுத்தவும்
கோடையில் பைக் ஓட்டும் போது அதீத வேகத்தை தவிர்க்கவும், ஏனெனில் இதனால் உங்கள் உடலை வெப்பமான காற்று வேகமாக தாக்கும். இதன் காரணமாக நீங்கள் பைக் ஓட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். அதே போல் உங்கள் உடலில் உள்ள நீரின் அளவு வேகமாக வறண்டுவிடும். இதனால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படக்கூடும்.
குடிநீர் எடுத்துச் செல்லுங்கள்
கோடைக்காலத்தில் நம் உடலில் இருந்து வியர்வையாக அதிக நீர் வெளியேறுகிறது. ஆகையால் நாம் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் கடுமையான வெயிலிலும், வெப்பத்திலும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்னை ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும், முடிந்தால், ஓஆர்எஸ் கலவையை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்.
மேலும் படிக்க | Maruti WagonR Vs Celerio: உங்களுக்கு ஏற்ற சிறந்த கார் எது? ஒப்பீடு இதோ
அதிகாலை பயணம்
கோடை காலத்தில் நீங்கள் நீண்ட பயணத்திற்கு செல்ல வேண்டியிருந்தால், அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யுங்கள். இதனால் வெப்பம் அதிகமாகும் முன் உங்கள் இலக்கை அடையலாம். உங்கள் பயணம் மதியம் வரை முடிவடையவில்லை என்றால், பகலில் இரண்டு மணி நேரம் எங்காவது நிறுத்திவிட்டு சிறிது ஓய்வெடுத்து, சாப்பிட்டு உங்களை ரீசார்ஜ் செய்து, மீண்டும் பயணத்தைத் தொடங்குங்கள்.
அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்
பைக்கை ஓட்டிச் செல்வதற்கு முன், குடிநீர், காட்டன் டவல், சில தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் இருந்து வெளிவரும் வியர்வையை குறைக்க, நீங்கள் கூலிங் வெஸ்டை அணியலாம், இது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
போதுமான காற்று
பைக் ஓட்டும் போது, சற்று தளர்வான ஆடைகளை அணியுங்கள். அதனால் வெளிக்காற்று உங்கள் வியர்வையை வசதியாக உலர்த்தும். இருப்பினும், அதிக காற்று பெறுவதற்காக ஹெல்மெட்டைக் கழற்றும் தவரை செய்துவிடாதீர்கள். மேலும், உங்கள் பைக்கில் தனித்தனி விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டிருந்தால், முன்பக்கத்தில் இருந்து போதுமான காற்றைப் பெறுவதற்கு, அதை கீழே இறக்கவும்.
மேலும் படிக்க | Cheapest Electric Cars: இவைதான் இந்தியாவின் மிக மலிவான எலக்ட்ரிக் கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ