புதிய இடத்திற்குச் செல்கையில், நம்மில் பலர், வழியை அறிந்து கொள்ள Google மேம்ஸ் என்னும் வரைபடத்தைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நேரங்களில், கூகுள் மேப்ஸ் நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது என்றாலும், சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் தவறான வழிகளை பரிந்துரைக்கிறது என்பதையும் மறுக்க இயலாது. அதன் காரணமாக நாம் பாதை மாறி சிக்கலில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேப்ஸ் காட்டிய வழியை நம்பி, உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதால், ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், இதே போன்று, கூகுள் மேப் தவறாக வழிநடத்தியதன் காரணமாக சிக்கலில் சிக்கிய மற்றொரு சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம், கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையி, கூகுள் மேப்பில் கொடுக்கப்பட்ட வழிகளைப் பின்பற்றி சென்று கொண்டிருந்தது. இருப்பினும், இந்த ஆப், அவர்களை அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, பெலகாவி மாவட்டம், கானாபூர் தாலுக்காவில் உள்ள அடர்ந்த வனப் பகுதியை நோக்கி அவர்களை வழிநடத்தியது. இதனால், அவர்கள் இரவை காருக்குள் கழிக்க நேரிட்டது.
பின்னர் அவர்கள் உள்ளூர் பொலிசார் கிராம மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். கானாபூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் நாயக் இது குறித்து கூறுகையில், குழந்தைகள் உட்பட ஆறு முதல் ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் காட்டுக்குள் கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் உள்ளே சிக்கித் தவித்ததாக கூறினார்.
மேலும் படிக்க | கூகுள் மேப்ஸ் நம்பி சென்ற 3 பேர் பலி... பாதுகாப்பாக பயன்படுத்த சில டிப்ஸ்
“பீகாரைச் சேர்ந்த ராஜ்தாஸ் ரஞ்சிதாஸ் தலைமையிலான குடும்பம், கோவாவுக்குப் பயணம் செய்ய கூகுள் மேப்ஸை பயனபடுத்திய . கானாபூர் நகரம் வழியாகச் சென்ற பிறகு, வரைபடம் அவர்களை ஷிரோடாகா மற்றும் ஹெமடகா கிராமங்களுக்கு இடையேயான பாதையில் அழைத்துச் சென்று, வியாழன் அன்று பீம்காட் வனவிலங்கு மண்டலத்திற்குள் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு அழைத்துச் சென்றது. இப்பகுதியில் மொபைல் நெட்வொர்க் இல்லாததால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல், அக்குடும்பம் காரில் இரவைக் கழித்தது என்று நாயக் கூறினார்.
“காடுகளை விட்டு எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் அந்தக் குடும்பம், இரவு முழுவதும் வனவிலங்குகளால் சூழப்பட்ட காட்டில் சிக்கிய நிலையில், பூட்டிய காரில் இரவு நேரம் கழிந்தது. மறுநாள் காலை, குடும்பம் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு, அங்கு அவர்கள் மொபைல் நெட்வொர்க் கவரேஜை மீண்டும் பெற்றனர். அவர்கள் உடனடியாக போலீஸ் ஹெல்ப்லைனை அழைத்து தங்கள் நிலைமையை கூறினர் என்று காவல் துறை அதிகாரி மேலும் கூறினார்.
குடும்பம் எப்படி மீட்கப்பட்டது என்பதை விளக்கிய நாயக், “பெலகாவி காவல் கட்டுப்பாட்டு அறை கானாபூர் காவல்துறைக்கு தகவலை அனுப்பியது, அவர்கள் ஜிபிஎஸ் ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்தி குடும்பத்தைக் கண்டுபிடித்து கிராமவாசிகளின் உதவியுடன் அவர்களைத் தொடர்பு கொண்டனர். மொபைல் சிக்னலை அணுகும் இடத்திற்கு குடும்பம் வந்ததால் தான் கண்டுபிடிக்க முடிந்தது என காவல் துறை அதிகாரி மேலும் கூறினார்.
மேலும் படிக்க | Google Maps உடன் போட்டியிடும் இந்தியாவின் MapmyIndia Maps... இரண்டில் எது சிறந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ