Flipkart Sale: பழைய ஏசியால் அவஸ்தைப்படுகிறீர்களா... இந்த குளு குளு எக்ஸ்சேஞ்ச் ஆப்பரை பாருங்கள்!

உங்கள் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஏசியை வைத்துக்கொண்டு, இந்த கடுமையான வெயிலை தாங்கிக்கொள்ள முடியவில்லையா, இந்த பட்ஜெட்டை பதம்பார்க்காமல் நல்ல விலையில் புதிய ஏசியை Flipkart AC Exchange திட்டத்தில் வாங்கலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 23, 2023, 04:54 PM IST
  • இந்த திட்டம் தற்போது Flipkart-இல் புதிதாக கொண்டுவரப்பட்டது.
  • மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுடன் Flipkart கூட்டு சேர்ந்துள்ளது.
  • இதன்மூலம், இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
Flipkart Sale: பழைய ஏசியால் அவஸ்தைப்படுகிறீர்களா... இந்த குளு குளு எக்ஸ்சேஞ்ச் ஆப்பரை பாருங்கள்! title=

பழைய ஏசியை வைத்துக்கொண்டு இந்த மார்ச் மாத வெயிலையே சமாளிக்க முடியவில்லையா. இதுதான் சரியான நேரம், உங்களின் பழைய ஏசியை கொடுத்து புதிய ஏசியை வாங்கிக்கொள்ள... உங்களுக்கு தோன்றலாம், இந்த பழைய ஏசியை எங்கே நல்ல விலைக்கு எடுப்பார்கள் என்று, அதற்கு ஒரு விடையை இங்கு தருகிறோமே. 

புதிய ஏசியை வாங்குவது உங்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கலாம். இந்த பொருளாதார மந்தநிலை நிலவும் இந்த நேரத்தில், புதிய ஏசியை பல ஆயிர ரூபாய் கொடுத்து வாங்குவது பலருக்கும் நல்ல யோசனையாகவும் இருக்காது. எனவேதான், பழைய ஏசியை கொடுத்துவிட்டு புதியதை வாங்கும் யோசனையை அதிகமானோர் விரும்புகின்றர்.

Flipkart சமீபத்தில் அதன் தளத்தில், பயன்படுத்தப்பட்ட ஏசிகளுக்கான எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிளிப்கார்ட் மூலம் இதைச் செய்வது தற்போது எளிமையாக சாத்தியமாகிவிட்டது. சான்றளிக்கப்பட்ட மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுடன் Flipkart கூட்டு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீங்களும் புதிய ஏசி வாங்க திட்டமிட்டு உங்கள் பழைய மெஷினை மாற்ற விரும்பினால், கூடுதல் தள்ளுபடிகளைப் பெற பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தைப் பயன்படுத்தலாம். ஃபிளிப்கார்ட் ஏர் கண்டிஷனர் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கே காணலாம்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு அப்ளை பண்ணா இனி உடனே கிடைக்கும்.! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை எப்படி பயன்படுத்துவது?

- Flipkart வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் Flipkart பயன்பாட்டைத் திறக்கவும்.
- நீங்கள் வாங்க விரும்பும் ஏசியை தேர்வு செய்யவும்.
- பொருள்களுக்கான பக்கத்தில், ஏசி எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்து, உங்கள் பழைய ஏசியின் பிராண்ட், மாடல், ஆண்டு மற்றும் நிபந்தனை போன்ற விவரங்களை உள்ளிடவும்.
- விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கணக்கிடப்பட்டு திரையில் காட்டப்படும். பின்னர் செயல்படுத்தவும்.
- ஆர்டர் செய்த பிறகு, Flipkart-இல் இருந்து உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் பெறுவீர்கள்.

பழைய ஏசி பரிசோதனை!

-Flipkart பின்னர் ஒரு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணரை உங்கள் முகவரிக்கு அனுப்பும். முன்னர், அவர் உங்களின் பழைய ஏசியை பார்க்க, சந்திப்பைத் திட்டமிட உங்களைத் தொடர்புகொள்வார்.
- தொழில்நுட்ப வல்லுநர் பழைய ஏசியை இலவசமாக உங்கள் வீட்டில் இருந்து எடுத்துவிடுவார்.
- ஏசி நீக்கப்படும் நாளில், தொழில்நுட்ப வல்லுநர், ஏசி எக்ஸ்சேஞ்ச் செயலாக்கத்தை தொடர, பழைய ஏசியின் நிலையைச் சரிபார்ப்பார்.
- சரிபார்ப்பு முடிந்ததும், தொழில்நுட்ப வல்லுநர் உங்களுக்கு ஏசியை நீக்குவதற்கான சான்றிதழை வழங்குவார். புதிய ஏசி டெலிவரி செய்யும் போது இந்த சான்றிதழை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

புதிய ஏசி டெலிவரி 

- அதன் பிறகு, டெலிவரி முகவர் புதிய ஏசியை உங்கள் வீட்டில் டெலிவரி செய்வார். டெலிவரி ஏஜென்ட் சரிபார்ப்பிற்காக தொழில்நுட்ப வல்லுநரால் வழங்கப்பட்ட நிறுவல் நீக்கம் சான்றிதழைச் சரிபார்ப்பார்.
- பணம் கொடுக்கப்பட்ட பிறகு, டெலிவரி ஏஜென்ட் புதிய ஏசியை டெலிவரி செய்வார், பழைய ஏசி டெலிவரி ஏஜென்ட்டால் எடுக்கப்படும்.

மேலும் படிக்க | சூப்பர் செய்தி!! ஏசி கோச்களின் கட்டணம் குறைந்தது: இந்திய ரயில்வே அளித்த மாஸ் தகவல்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News