Samsung பெரிய திட்டம்; மீண்டும் வரவிருக்கும் Note சீரிஸ் ஸ்மார்ட்போன்

புதிய Samsung Galaxy S22 Alta ஆனது Galaxy S22 Note என்று பெயரிடப்படும் என்று தகவல் அளித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2021, 10:23 AM IST
Samsung பெரிய திட்டம்; மீண்டும் வரவிருக்கும் Note சீரிஸ் ஸ்மார்ட்போன் title=

சாம்சங்கின் கேலக்ஸி நோட் தொடர் மிகவும் பிரபலமானது. நிறுவனம் தற்போது நோட் தொடரை நிறுத்தப் போகிறது என்று நீண்ட காலமாக ஒரு விவாதம் இருந்தது. இருப்பினும், சமீபத்திய கசிவில், நிறுவனத்தின் புதிய நோட் சாதனத்தை விரைவில் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22) சீரிஸின் ஒரே ஒரு போனுக்கு மட்டுமே 'நோட்' என்று நிறுவனம் பெயரிட முடியும் என்று கூறப்படுகிறது. ட்விட்டரில் ஒரு டிப்ஸ்டர் (@Frontron) புதிய Samsung Galaxy S22 Alta ஆனது Galaxy S22 Note என்று பெயரிடப்படும் என்று தகவல் அளித்துள்ளது.

ALSO READ:Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 9499-க்கு அட்டகாசமான 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவி 

இந்த போனில் கேலக்ஸி நோட் வசதி இருக்கும்
Samsung Galaxy S22 Ultra ஆனது Note என்று பெயரிடப்பட்டதற்கு ஒரு காரணம், இது தொடரின் மிகப்பெரிய டிஸ்ப்ளே கொண்ட சாதனமாக இருக்கும். இது மட்டுமல்லாமல், Galaxy S22 Ultra ஆனது S-Pen இன் ஆதரவைப் பெற முடியும் என்று சில வதந்திகளிலும் கூறப்பட்டது. இதற்கிடையில் Samsung Galaxy S22 சீரிஸ் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அறிக்கைகளின்படி, சாதனம் பிப்ரவரி 8 ஆம் தேதி லாஞ்ச செய்யப்படும். கேலக்ஸி எஸ் 22, கேலக்ஸி எஸ் 22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ் 22 நோட் உள்ளிட்ட மொத்தம் மூன்று வகைகளுடன் இந்த சீரிஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனில் Exynos 2200 சிப் அல்லது புதிய Snapdragon 8 Gen 1 செயலி இருக்கலாம். டாப் வேரியண்டில், 5,000எம்ஏஎச் பேட்டரி, 108எம்பி பிரைமரி கேமரா மற்றும் இரண்டு டெலிஃபோட்டோ கேமராக்கள் கொடுக்கப்படலாம்.

நிறுவனம் Galaxy S21 Ultra மற்றும் Galaxy Z Fold 3 மூலம் நோட் தொடரின் இடத்தை நிரப்ப முயற்சித்தது, ஆனால் தோல்வியடைந்தது. இந்த இரண்டு போன்களும் Galaxy Note போன்ற S Pen ஆதரவுடன் வந்தன, ஆனால் Galaxy Note 20 Ultra (நோட் தொடரின் கடைசி சாதனம்) போன்ற S-Pen ஒருங்கிணைக்கப்படவில்லை. இந்த சாதனங்களுக்கான S-Penஐ வாடிக்கையாளர்கள் வாங்கி தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.

ALSO READ:Flipkart Big Bachat Dhamaal Sale: டிசம்பர் 4 துவங்குகிறது அசத்தல் சேல், ஏகப்பட்ட சலுகைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News