புது உற்சாகத்தோடு பிறந்திருக்கும் 2022 ஆம் ஆண்டில் 20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில், நல்ல தரமான அம்சங்களை கொண்டிருக்கும் 4 ஸ்மார்ட்போன்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம்.
1. Redmi Note 11T
இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் என 3 வகைகளில் கிடைக்கிறது. இது MediaTek Dimensity 810 SoC மூலம் இயக்கப்படுகிறது. இவை அனைத்தும் 5ஜி ஸ்மார்ட்போன்கள். ஃபோன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா இடம்பெற்றிருக்கும். முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் 6.6-இன்ச் ஃபுல் எச்டி+ எல்சிடி பேனல் மற்றும் 2400 x 1080 ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஸ் வீதத்தைக் கொண்டுள்ளது. 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது.
ALSO READ | Hyundai; SUV விற்பனையில் கோலோச்சும் ஹூண்டாய்..! இந்த ஆண்டுக்கும் ப்ளான் ரெடி..!
2. Realme 8 5G
5 ஜி ஸ்மார்ட்போனான இது, ஸ்மூத் 90Hz திரை மற்றும் மூன்று கேமராக்களைக் கொண்டிருக்கிறது. Realme 8 5G -ன் டிஸ்ப்ளே 6.5-இன்ச். MediaTek Dimensity 700 செயலி மூலம் இயக்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் டிரிபிள் கேமராவைக் கொண்டுள்ளது. அதனுடன் இரண்டு 2 மெகாபிக்சல் துணை கேமராக்கள் உள்ளன. 16 மெகாபிக்சல் முன் செல்ஃபி கேமராவும் உள்ளது. 5000mAh பேட்டரி இருக்கும்.
3. மோட்டோரோலா மோட்டோ ஜி60
மோட்டோரோலா மோட்டோ ஜி60, 6 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனாகும். இதில் 6.8 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் 120Hz உயர் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும். Qualcomm Snapdragon 732G மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 20W டர்போசார்ஜருக்கான ஆதரவுடன் 6000 பேட்டரியைக் கொண்டுள்ளது. பேட்டரி இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்.
ALSO READ | Vi அதிரடி ரீசார்ஜ் திட்டம்; மிரண்டுபோன Airtel மற்றும் Jio
4. Realme Narzo 30 5G
Realme Narzo 30 5G ஸ்மார்ட்போன், MediaTek Dimensity 700 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 6GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கேமிங் விளையாடுபவர்களுக்கு ஏற்றது. சூப்பரான கிராபிக்ஸ் அமைப்பு இந்த ஃபோனில் உள்ளது. மேலும், 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5-இன்ச் முழு-HD+ LCD டிஸ்பிளே உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை சென்சாருடன், 48 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சலைக் கொண்டிருக்கும். 5000mAh பேட்டரி உள்ளது.
இந்த நான்கு ஸ்மார்ட்போன்களும் 20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய நல்ல தரமான ஸ்மார்ட்போன்களாகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR