Jio IPL Plans: ரிலையன்ஸ் ஜியோ கிரிக்கெட் ரசிகர்களுக்காக மூன்று புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் தடையின்றி காணும் வகையில், 40 GB வரை டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.
"ஜியோ கிரிக்கெட் திட்டமானது, மிக அதிக டேட்டா சலுகையுடன் நிரம்பியுள்ளது. ஒருநாளுக்கு 3 GB மற்றும் கூடுதல் இலவச டேட்டா வவுச்சர்களை வழங்குவதன் மூலம் தடையற்ற ஸ்ட்ரீமிங் அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது" என்று ஜியோ நிறுவனம் இந்த திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளது.
ரூ. 999 திட்டம்
ஜியோ 40 GB வரை இலவச டேட்டாவுடன் மூன்று புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஜியோவின் புதிய ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இது தவிர, ஜியோ பயனர்கள் ரூ.241 மதிப்புள்ள வவுச்சரையும் இலவசமாகப் பெறுகிறார்கள். இதில் 40 GB டேட்டாவும் அடங்கும். இந்த புதிய பேக் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
மேலும் படிக்க | 70 நாள் வேலிடிட்டி..BSNL அசத்தல் சிறப்பு ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்
ரூ.399 மற்றும் ரூ.219 ஜியோ ரீசார்ஜ் திட்டங்களும் தினசரி 3 GB டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகின்றன. இரண்டு திட்டங்களும் செல்லுபடியாகும் மற்றும் வவுச்சர் சலுகையின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
இந்த ரூ.399 திட்டத்தில் ரூ.61 மதிப்புள்ள இலவச வவுச்சர் மற்றும் 6 GB கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. ரூ.399 திட்டம், 28 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும். ரூ.219 பேக் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது 2 GB இலவச டேட்டாவை வழங்கும்.
புதிய ஆட்-ஆன் திட்டம்
டெலிகாம் நிறுவனம் மூன்று புதிய டேட்டா-ஆன் திட்டங்களையும் அறிவித்துள்ளது. ரூ.222 டேட்டா ஆட்-ஆன் பேக் 50 GB டேட்டாவை வழங்குகிறது, மேலும் உங்களின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டம் வரை செல்லுபடியாகும். ரூ.444 ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் 100 GB டேட்டா அடங்கும். மேலும், ரூ.667 ஜியோ டேட்டா ஆட்-ஆன் பேக் 150 GB டேட்டாவை வழங்குகிறது. நீங்கள் அதை வாங்கும்போது 90 நா்ட்களுக்கு செல்லுபடியாகும்.
ஜியோ சினிமாஸ்
ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை கடந்த மார்ச் 24 முதல் வாங்குவதற்கு ஆரம்பித்துள்ளது. ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனை ஜியோ சினிமாஸ் ஓடிடி தளம் மூலம் மொபைல், கணினி, ஸ்மார்ட்-டிவி, டேப்லெட் என பல சாதனங்களில் இலவசமாக காணலாம்.
மேலும் படிக்க | BSNL வாடிக்கையாளர்களுக்கு பெரிய அப்டேட், உற்சாகமடைந்தனர் பயனர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ