Online Shopping: பிளிப்கார்ட் - அமேசானில் வாங்குவதற்கு முன்னால இதை தெரிஞ்சுகோங்க: உங்க பணத்துக்கு ஆபத்து

பண்டிகை காலங்களில் ஆஃபர் பெயரில் நடைபெறும் மோசடிகளை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 28, 2022, 04:45 PM IST
  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்
  • பண்டிகை காலத்தை குறிவைக்கும் ஹேக்கர்
  • விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்
Online Shopping: பிளிப்கார்ட் - அமேசானில் வாங்குவதற்கு முன்னால இதை தெரிஞ்சுகோங்க: உங்க பணத்துக்கு ஆபத்து title=

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், ஆன்லைன் தளங்களில் அதிக ஆஃபர்களில் எலக்டிரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்மார்ட் போன்கள் முதல் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எதிர்பார்க்காத விலையில் இந்த பண்டிகை கால ஆஃபரில் வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் கூடுதல் பணத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில் இந்த சமயத்தில் அதிக மோசடிகளும் அரங்கேற்றப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான போலிச் செய்திகளை அனுப்பி மோசடியாளர்கள், பணத்தை சுருட்டுகின்றன. 

அவர்கள் வலையில் நீங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால், விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். பண்டிகை காலத்தில் வாட்ஸ்அப் மற்றும் இமெயில் வழியாக கவர்ச்சிகரமான ஆஃபர் செய்திகளைக் கொண்ட லிங்குகள் வருவதை பார்க்க முடியும். அந்த லிங்குகளை கிளிக் செய்தால் கூடுதல் தள்ளுபடி மற்றும் காஷ்பேக் ஆஃபர் கிடைக்கும் என கூறப்பட்டிருக்கும். ஆனால் இந்த லிங்குகளை நீங்கள் கண்டிப்பாக கிளிக் செய்யக்கூடாது. ஏனென்றால், பண்டிகை காலத்தில் அசல் தளத்தைப் போலவே மோசடி தளத்தை ஹேக்கர்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் லிங்குகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவ விட்டு, மோசடியை அரங்கேற்றுகின்றனர். URL https:// என தொடங்கும் லிங்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

மேலும் படிக்க | இதை மட்டும் செய்தால் உங்களின் இண்டர்நெட் வேகம் டபுள் ஸ்பீடாகும்

ஆன்லைனில் பணம் செலுத்துவதை தவிர்த்து கேஷ் ஆன் டெலிவரிக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஏனென்றால், பொருளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அந்த பொருளை ரிட்டன் போட்டு நீங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். பட்ஜெட் போட்டு ஷாப்பிங் செய்வது நல்லது. கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்ய வேண்டாம். டெபிட் கார்டு மற்றும் ரொக்கப் பணத்துக்கு முன்னுரிமை கொடுக்கவும். பணத்தை சேமிக்க சிறந்த வழி என்பதால் இந்த டிப்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. 

முதல் 2 நாட்களுக்கு நல்ல தரமான பொருட்களை சூப்பர் தள்ளுபடியில் நிறுவனங்கள் கொடுக்கின்றன. இதில் நீங்கள் பொருட்களை வாங்க விரும்பினால் முன்கூட்டியே ஷாப்பிங்கிற்கு தயாராக இருக்க வேண்டும். கடைசி 2 நாட்களில் 70 விழுக்காடு வரை தள்ளுபடி கிடைக்கும். இதனையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | UPI விதிகளில் மாற்றம்? ஒருநாளில் எவ்வளவு தொகை டிரான்ஸாக்ஷன் செய்யலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News