Apple அட்டகாச தீபாவளி சலுகை: இதை வாங்கினால் இலவசமாகக் கிடைக்கும் AirPods!!

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகியவை தொடங்கவுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2021, 03:04 PM IST
  • இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிவிட்டது.
  • ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு பொருட்களில் அதிக அளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன.
  • வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட ஏர்போட்கள் ரூ .18,900 க்கு கிடைக்கின்றன.
Apple அட்டகாச தீபாவளி சலுகை: இதை வாங்கினால் இலவசமாகக் கிடைக்கும் AirPods!! title=

Apple Diwali Offer: இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிவிட்டது. இந்த தருணத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு பொருட்களில் அதிக அளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன.

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசானின் (Amazon) கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகியவை தொடங்கவுள்ளன. இந்த சிறப்பு சலுகை விற்பனைகளில், ​​Flipkart இல், 2020 ஐபோன் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.  Apple India-வும் ஐபோன் 12 தொடரில் ஒரு புதிய பண்டிகை சலுகையை அறிவித்துள்ளது. ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினி வாங்கும் போது பயனர்கள் ஏர்போட்களை (AirPods) இலவசமாகப் பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

சலுகை அக்டோபர் 7 முதல் தொடங்கும்

iPhone 12 அல்லது iPhone 12 மினி வாங்கும் போது ஏர்போட்கள் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை அக்டோபர் 7 முதல் தொடங்கும். இந்த சலுகை ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே செல்லுபடியாகும். இந்த நன்மை எந்த தர்ட் பார்டி சேவையிலும் கிடைக்காது.

வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் அல்லது AirPods Pro உடன் AirPods 

மேம்படுத்தும் ஆப்ஷனையும் பயனர்கள் பெறுவார்கள். இதற்கு அவர்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டி இருக்கும். இதைப் பற்றிய விவரங்கள் சலுகைக் காலத்தின் போது தெரிவிக்கப்படும்.

ALSO READ: Samsung முதல் OnePlus வரை: அக்டோபரில் அறிமுகம் ஆகவுள்ள அட்டகாச போன்களின் பட்டியல்

இந்த சலுகையைப் பெற, உங்கள் கார்டில் ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினியை add செய்து, கட்டணப் பக்கத்தில் இலவச ஏர்போட்களுக்கான ஆப்ஷனைக் காண்பீர்கள்.

ஆப்பிள் (Apple) இரண்டாம் தலைமுறை ஏர்போட்களை தனது இணையதளத்தில் ரூ .14,900 க்கு விற்பனை செய்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட ஏர்போட்கள் ரூ .18,900 க்கு கிடைக்கின்றன. அதாவது, பயனர்கள் வயர்லெஸ் சார்ஜிங் கேஸுடன் ஏர்போட்களை மேம்படுத்த ரூ .4,000 கூடுதலாக செலுத்த வேண்டும். இதேபோல், AirPods Pro-ஐ மேம்படுத்த, வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ. 10,000-ஐ செலுத்த வேண்டும்.

இந்தியாவில் ஐபோன் 12 விலை

ஐபோன் 13 சீரிஸ் அறிமுகம் ஆன பிறகு இந்தியாவில் ஐபோன் 12-ன் விலை குறைக்கப்பட்டது. 64 ஜிபி சேமிப்பு கொண்ட அடிப்படை மாறுபாடு ரூ. 65,900 க்கு கிடைக்கிறது. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களை முறையே ரூ .70,900 மற்றும் ரூ .80,900 க்கு வாங்கலாம். 2020 iPhone கருப்பு, நீலம், ஊதா, பச்சை வெள்ளை மற்றும் பிராடெக்ட் ரெட் ஆகிய வண்ணங்களில் வருகிறது.

மறுபுறம், இந்தியாவில் 12 மினியின் விலை ரூ .59,900 இலிருந்து தொடங்குகிறது. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ .64,900 மற்றும் ரூ .74,900 ஆகும். இது வெண்ணிலா மாடலில் கிடைக்கும் அனைத்து ஆறு வண்ணங்களிலும் வருகிறது.

ALSO READ: Flipkart Deals! இந்த ஸ்மார்ட்போன்களில் சிறப்பு தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News