TikTok விற்பனை காலக்கெடுவை 15 நாட்களுக்கு நீட்டித்தது அமெரிக்கா…

அமெரிக்காவில் TikTok செயலியின் விற்பனைக்கான காலக்கெடு 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் டிக்டோக் விற்பனைக்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2020, 05:01 PM IST
TikTok விற்பனை காலக்கெடுவை 15 நாட்களுக்கு நீட்டித்தது அமெரிக்கா… title=

அமெரிக்காவில் TikTok செயலியின் விற்பனைக்கான காலக்கெடு 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் டிக்டோக் விற்பனைக்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் நிர்வாகம் டிக்டாக் செயலி தொடர்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான அச்சங்களை வெளியிட்டிருந்தது. அந்தக் கவலைகளைத் தீர்ப்பதற்காக பிரபலமான வீடியோ தளமான TikTokஇன் வணிகத்தை வேறு இடத்திற்கு திசைதிருப்ப TikTokஇன் உரிமையாளரும், சீனாவின் மெகா நிறுவனமுமான பைட் டான்ஸ் (ByteDance) முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ByteDanceக்கு தற்போது அதன் முயற்சியைத் தொடர மேலும் 15 நாட்கள் கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான வர்த்தக துறையின் கமிட்டி (சி.எஃப்.ஐ.யு.எஸ்) (Foreign Investment in the United States (CFIUS)), டிக்டாக் விற்பனை தொடர்பான காலக்கெடுவை 15 நாட்கள், அதாவது நவம்பர் 27 வரை நீட்டித்துள்ளது. 

ஃபெடரல் நீதிமன்றத்தில் பைட் டான்ஸ் (ByteDance) தாக்கல் செய்த நோட்டீஸில், நவம்பர் 12க்குள் டிக்டோக்கை விற்பனை செய்ய வேண்டும் என்ற  காலக்கெடுவை நவம்பர் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

டிரம்ப் நிர்வாகம் டிக்டோக்கின் சீன உரிமையாளருக்கு அதன் பிரபலமான வீடியோ பகிர்வு பயன்பாட்டை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் அல்லது அதன் அமெரிக்க வணிகத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவில் டிக்டாக்கை வாங்கத் தயாராக இருப்பவர்களுடன் விற்பனை ஒப்பந்தத்தை எட்டுவதில் பைட் டான்ஸுக்கு பல தடைகளும் சிக்கல்களும் ஏற்பட்டன.  இதனால்  ByteDance நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நவம்பர் 12 என்ற காலக்கெடுவை 30 நாட்களுக்கு நீட்டிக்குமாறு டிரம்ப் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் அவர்களுக்கு 15 நாள் நீட்டிப்பை மட்டுமே வழங்கியது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News