டெல், சாம்சங், ASUS, Noise, GoPro மற்றும் பல போன்ற பிரபலமான பிராண்டுகளிலிருந்து நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள், கணினி தொடர்பான பொருட்கள் என மின்னணு சாதனங்களுக்கு சிறந்த சலுகைகளை அமேசானின், மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் தருகிறது. யெஸ் பேங்க், ஜே&கே வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, எச்எஸ்பிசி, ஒன்கார்டு மற்றும் ஐடிஎஃப்சி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
ASUS TUF கேமிங் F17 லேப்டாப்
11வது தலைமுறை இன்டெல் கோர் i5 செயலி, RTX 2050, 8GB ரேம் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ள ASUS TUF கேமிங் F17 லேப்டாப் மூலம் ஒப்பிடமுடியாத கேமிங்கை அனுபவிக்கவும். இது இதை ரூ.65,990க்கு வாங்கலாம்.
டெல் 15 லேப்டாப்
12வது தலைமுறை இன்டெல் கோர் ஐ3 ப்ராசசர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி, மெக்காஃபி மல்டி டிவைஸ் செக்யூரிட்டி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் நிரம்பிய டெல் 15 லேப்டாப்பை ரூ.35,990க்கு அமேசானில் வாங்கலாம்.
GoPro HERO12
எதிர்பார்ப்புகளை விஞ்சும் படத் தரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள GoPro HERO12, 5.3K இல் புகைப்படங்களை எடுக்கிறது. இலகுரகமான இது சாகசங்களை விரும்புபவர்களுக்கு சரியான தோழனாக இருக்கும். 33 அடி வரை நீர்ப்புகாத இந்த சிறப்பு கேமராவில் ஹைப்பர்வியூ மற்றும் சூப்பர்வியூ டிஜிட்டல் லென்ஸ்கள் போன்ற சிறப்பு அம்சங்களும் உண்டு. இதனை ரூ.34,990க்கு வாங்கலாம்.
ஜேபிஎல் டியூன் 245என்சி
தெளிவான ஆடியோ அனுபவத்திற்கு ஜேபிஎல் ட்யூன் 245என்சி அருமையாக இருக்கும். இது தூய பேஸ் ஒலி மற்றும் மிருதுவான மற்றும் தெளிவான அழைப்புகளுக்கு 4 மைக்குகளைக் கொண்டுள்ளது. TWS ANC இயர்பட்கள், வாட்டர்/டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், புளூடூத் 5.3 மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. இதை ரூ.4,499க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | வாட்ஸ்அப் தரவுகள் மற்றும் செய்திகளை வேறொரு போனுக்கு மாற்ற சுலபமான வழிமுறை!
லாஜிடெக் K580 கீபோர்ட்
லாஜிடெக் கே580 ஸ்லிம் கீபோர்டை, கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்ய வாங்கலாம். ஈஸி-ஸ்விட்ச் டயல் அம்சம் இணைக்கப்பட்ட புளூடூத் வயர்லெஸ் சாதனங்களுக்கு இடையே ஒரு சுவிட்ச் டைப்பிங் செய்ய உதவுகிறது. இதை 3,495க்கு வாங்கலாம்.
Noise Pulse 4 Max
அமேசானின் மெகா எலக்ட்ரானிக்ஸ் டே தள்ளுபடி விற்பனையில், AI கிரியேட் பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.96” AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் அழைப்பு உட்பட பல அம்சங்களுடன் வருகிறது. Noise Pulse 4 Max ஆனது ஒரு மெட்டாலிக் டயல் ஃபினிஷுடன் வருகிறது, இதை ரூ.2,799க்கு வாங்கலாம்.
Samsung Galaxy Tab S6 Lite
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மூலம் டால்பி அட்மாஸ் 3டி சரவுண்ட் சவுண்ட், எஸ்-பென் மற்றும் பலவற்றைக் கொண்ட பிரீமியம் அனுபவத்தைப் பெறலாம். கூடுதலாக, அதன் இலகுரக மற்றும் மெலிதான அம்சங்கள், இதனை கையாள்வதற்கு உதவியாக இருக்கும். ரூ.20,999க்கு அமேசானில் வாங்கலாம்.
சாம்சங் வாட்ச் 4
BIA அளவீடு, மேம்பட்ட தூக்கப் பகுப்பாய்வு மற்றும் 90 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சிகள் போன்ற அம்சங்களுடன், சாம்சங் வாட்ச் 4 வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சாய்ஸாக இருக்கும். ரூ.9,499க்கு இதனை வாங்கலாம்.
சோனி WH-1000XM5
புதிய ஒருங்கிணைந்த செயலி V1 உடன் வடிவமைக்கப்பட்ட அற்புதமான ஒலியுடன் வரும் ஹெட்ஃபோன்கள் இது. தொடர்ச்சியான மியூசிக் பிளேடைம், கிரிஸ்டல் கிளியர் ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்பு, துல்லியமான குரல் பிக்அப் மற்றும் மேம்பட்ட ஆடியோ சிக்னல் செயலாக்கத்திற்கு 40 மணிநேர பேட்டரி கொண்ட இந்த ஹெட்ஃபோனை ரூ.28,971க்கு வாங்கலாம்.
சியோமி பேட் 6
ஸ்டைலான மெட்டல் யூனிபாடி வடிவமைப்புடன் வரும் Xiaomi Pad 6, 2.8K தெளிவுத்திறனுடன் 27.9 cm டிஸ்ப்ளே, Dolby Atmos, Qualcomm Snapdragon 870, 144Hz புதுப்பிப்பு விகிதம், HDR 10 மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது. ஹைப்பர் ஓஎஸ் மூலம் இயக்கப்படும் Xiaomi Pad 6, உற்பத்தித்திறன், படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்கிறது. இதை ரூ.25,999க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | உயிர் விலைமதிப்பற்றது... கார் வாங்கும் போது இதெல்லாம் இருக்கான்னு செக் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ